செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஊளையிடும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு வெள்ளாடு.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[18 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26341
அன்பானவர்களே... அன்று எழுத்தாளர் சொன்னது இன்று நிஜமானது... படியுங்கள்... நடுநிலையோடு...
ஊளையிடும் ஓநாய் கூட்டத்திற்கு மத்தியில் ஒரு வெள்ளாடு இருப்பது போன்ற காட்சியே அங்கு இருந்தது. ஆனால் அந்த ஆட்டுக்குட்டி அஞ்சவில்லை. கணீர் என்ற குரலில் தனது நியாயமான வாதத்தை எடுத்து வைத்தது. உடனே பெண் உறுப்பினர் ஒருவர் “நீ ராஜினாமா செய்டீ" என்று திருப்பித் திருப்பி கோபத்தின் உச்சியில் இருந்து கேட்டதை என் கண்களால் நம்ப முடியவில்லை. என்கிறார் 30.08.2012 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் அவர் பார்வையாளராக இருந்த அவருக்கு வேதனைக்குப் பஞ்சமில்லை என விவரித்து ஒரு கட்டுரையே எழுதினார்.. இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) தலைவர், சமூக அக்கறை உள்ள எழுத்தாளர், தொலைநோக்கு சிந்தனையாளர், கட்டுரை ஆசிரியர்: ஜனாப் எம்.எஸ்.ஷாஜஹான் (துறை) அவர்கள். இன்று அந்த கட்டுரையின் உண்மை விளக்கம் - பொது கூட்டத்தில் அரங்கேறி உள்ளது...
ஏலக் கடையா? மீன் கடையா? இல்லை கள்ளுக் கடையா? இப்படித்தான் நமது வரி பணத்தில் அணைத்து நகரமன்ற கூட்டங்களும் நடத்தப்பட்டு பாதியில் வெளிநடப்பு செய்யப்பட்டுள்ளது..! உறுப்பினர்கள் சில சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான். மக்கள்தான் அவர்களின் எஜமானர்களே தவிர வேறு யாருமல்ல! மக்களுக்கு பணி செய்யாது மக்களின் வரி பணத்தை சம்பளம் வாங்குவது முறையாகுமா? சிந்திக்க வேண்டாமா..?
நகர் மன்றத்தில் நடப்பது ஒரு பொம்மலாட்டம் (கைக்கூலிகள்) என்றே பலரும் அன்று பேசினார்கள் நானும் அன்று நம்பவில்லை... நகரமன்ற தலைவியின் விளக்க உரை திரு குர்ஆனை கையில் வைத்து மக்கள் முன் சத்தியம் செய்து ஆட்டுவிப்பவர் யார்.. அந்த தனி மனித கோமாளி யார்...? அதனால் நகர்மன்றத்தில் என்ன.. என்ன.. பாதிக்கபடுகிறது என்று நேற்று பொது மேடையில் மக்கள் வெள்ளத்தின் முன் விளக்கம் அளித்து உள்ளார்கள்...
இதற்க்கு சம்பந்தப்பட்டவர்கள் (உறுப்பினர்கள்) மற்றும் (தனிமனித கோமாளி) பொது மக்கள் முன் பதில் தரவேண்டும் என்ற நியாயமான எதிபார்ப்பு நகர் மக்கள் மத்தியில் மேலோங்கி காணப்படுகின்றன...!
தலைவியிடமும் சிறு தவறு இருக்கலாம். உறு்பபினர்களிடமும் சிறு தவறு இருக்கலாம். அவற்றை நகரின் முக்கிய பெரியவர்களிடம் முறையாக பேசித் தீர்க்க வேண்டுமேயொழிய தனி மனித கோமாளியின் சதுர ஆட்டங்களுக்கு மக்கள் வரிப்பணத்தின் மீது விளையாடதீர்கள்... எத்தனை நபர்கள் குடிநீர் இணைப்பு - தெரு விளக்கு - வீட்டு தீர்வை - வீட்டு ப்ளான் - பெயர் மாற்றம் - பிறப்பு - இறப்பு இப்படி பல விசியங்களுக்கு தினமும் நகர்மன்றம் வந்து அங்கு (தீர்வு) வழி தெரியாமல் பாவம் அலைகிறார்கள்... அவர்களின் நிலைகளை சரி செய்வது நமது கடமை என்பதனை உணரவேண்டும்...
இறுதியாக...
உறுப்பினர்களாகிய உங்களுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளது முடிந்தால் மனம் திருந்தி நகரின் நன்மைக்காக மீதம் உள்ள நாட்களை கழியுங்கள்..
குறிப்பு:- ஏதாவது இந்த விளக்க உரைக்கு மறு விளக்கம் அளிக்க கூட்டம் போடுவதாக இருந்தால் அந்த கூட்டத்தின் மேடை - மைக் - இருக்கை (சேர்) இவைகளின் செலவுகளை நான் ஏற்று கொள்கிறேன்... தொடர்பு கொள்ளவும்.. 04639 - 285282..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross