செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[18 March 2013] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26343
எல்லாப் புகழும் இறைவனுக்கே.
ஒரு பரபரப்பான கட்டம் அரங்கேறிவிட்டது. புரியாத பலருக்கும் புரிய ஆரம்பித்து விட்டது, பல உண்மைகள்.
இந்த செய்திகளை படித்து முடித்ததும் இரண்டு விசயங்கள் என் மனக்கண்ணில் ஓடியது. இரண்டும் பலரும் அறிந்தது தான்.
ஒன்று,
மிகவும் சந்தோசத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதியையும், மிகவும் கோபத்தில் மற்றும் டென்சனில் கொட்டப்படும் வார்த்தையையும் கையாளுவதில் மிகவும் கவனமாக இருக்கனும்.
- டென்சனில் உண்ணாவிரதம் என்று அறிவித்த இந்த வார்த்தைதான் இப்போது விவாதப்பொருளாக உள்ளது.
இரண்டாவது,
வாதனப்புத்தக நீதிக்கதை ஒன்றும் நினைவுக்கு வருகின்றது.
- சீனாவில் ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர் யான்யிங். அவருடைய முதல் மூன்று ஆண்டு கால நிர்வாகத்தில் அவரைப்பற்றி நிறையப் புகார்கள் மன்னனுக்கு வந்தன. அவரைப் பதவியிலிருந்து நீக்க முடிவு செய்த மன்னன் அவரை அழைத்து தன்னுடைய முடிவைச் சொன்னான்.
யான்யிங், மன்னரிடம் இன்னும் மூன்று ஆண்டுகள் பதவியில் தொடர அனுமதித்தால் புகார் இல்லாது செம்மையாக நிர்வாகம் செய்வதாக கூறியதால் அரசரும் அனுமதித்தார்.
அதன்பின் அவரைப்பற்றி மன்னரிடம் பாராட்டுக்கள் வந்து குவிந்தன. மகிழ்ச்சி அடைந்த மன்னன் அவரை அழைத்து பாராட்டி பரிசு தந்தார். ஆனால் அதை யான்யிங் ஏற்கவில்லை. ஆச்சரியத்துடன் மன்னர் காரணம் கேட்க, அவர் சொன்னார்
"மன்னா, நான் முதலில் ஆளுனராய் சென்றபோது அங்கு அரசாங்கத்தில் இருந்த ஊழலை ஒழித்தேன், குற்றவாளிகளைக் கடுமையாக தண்டித்தேன், பணக்காரர்களுக்கும், செல்வாக்கு படைத்தவர்களுக்கும் தனிச் சலுகை அளித்திட மறுத்தேன். சலுகைகளை எதிர்ப்பார்த்தவர்களுக்கு சட்டப்பூர்வமானதை மட்டும் அனுமதித்தேன். மேலதிகாரிகளை உபசரித்தபோது சிக்கனத்தை கடைபிடித்தேன். எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் என்னை வெறுத்தனர். என் மீது புகார்களை அனுப்பினர்.
பின் இந்த மூன்று ஆண்டுகள், நான் பணிபுரியும் விதத்தை மாற்றிக் கொண்டேன். ஊழலை உதாசீனம் செய்தேன். தண்டனைகளை குறைத்தேன். சலுகைகளை வாரி வழங்கினேன். இப்போது எல்லோரும் என்னை உயர்வாக பேசுகிறார்கள் ”.
நான் என்னுடைய முதல் மூன்று ஆண்டு பணிக்கு தான் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மூன்று ஆண்டு காலப் பணிக்கு நான் தண்டிக்கப் பட வேண்டியவன். அதனால் தான் நான் பரிசை ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்க்கு என் உள்ளுணர்வு ஒப்புக் கொள்ளவில்லை!
மன்னர் அடுத்த வாரமே அவரை வேறு ஒரு பகுதியின் பிரதம மந்திரி ஆக்கி சகல அதிகாரங்களையும் வழங்கினார்.
- இந்த நீதிக்கதை அப்படியே நமக்கு பொருந்துகிறது.
( இந்த நீதிக்கதை 6.3.2013 குமுதம் இதழ் 24 ஆம் பக்கம் உள்ளது).
ஆக, தலைவி அவர்களே, இறைவனுக்கு பயந்து நடந்து வாருங்கள். மக்களின் ஆதரவும் வல்ல ரஹ்மானின் துணையும் உங்களுக்கு கிடைக்கும்.
வல்ல ரஹ்மான் உங்களுக்கு மன வலிமையும், மக்களுக்கு அதிகம் அதிகம் சேவை செய்யனும் என்ற உறுதியையும், அதற்கும் அதிகமாக மன நிம்மதியையும் தருவானாக. நம் ஊரை ஒரு முன்மாதிரி ஊராக மாற்றுவனாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross