செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:..கனல் தெறிக்கும் ஒரு காரிகையின் சீற்றம்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[18 March 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26344
காயல் வரலாறு இதுவரை கண்டிராத கனல்கக்கும் ஒரு காரிகையின் சீற்றம்!
பொறுமையின் விளிம்பில் சென்று மனம் வெம்பி வேறு வழியின்றி வீதிக்கு வந்து உரைத்திட்ட வீர வசனங்கள்!
தலைவியின் முழுஉரையை கேட்டதில் கிடைத்திட்ட சில எண்ணத்துளிகள்!
உறங்கிகொண்டிருந்த அல்லது ஒளிந்து கொண்டிருந்த சில உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகிறது அதாவது,
நடுத்தர, பாமர வர்கத்தின் பிரதிநிதி பதவியின் சொந்தக்காரிக்கும், பண பவுசில் உலாவரும் வலிமை மிகு அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே நடந்த பனிப்போர் பெருதாகி புடைத்து இன்று வெடித்து விட்டது!
படைத்தவனின் படைப்பை பணத்தால் வாங்கிவிடலாம்
படைத்தவனை வாங்க முடியுமா?
பார் உலகை படைத்தது பரிபாலிப்பவனே, காழ்ப்புணர்ச்சியின் கொடூரத்தால் கதிகலங்கி நிற்கும் எங்கள் காயல்பதியை காப்பாற்றுப்வாயாக!
வீறுநடை வேகமங்கையே, உனை படைத்தவனையடுத்து .
உன் உள்ளத்துணிவிற்கு துணையாக தோல்கொடுக்க ஆயிரமாயிரம் அன்புள்ளங்கள் அணையுடைத்த வெள்ளமாய் வரத்துடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
பாளையத்தின் பெருமைமிகு வைரமே, பீங்கான் கல்லின் போலி பிம்பமா உன் வைர மின்னலை முறியடித்து விடும்?
போலிகள் புரமுதிகிடும் காலம் குறித்தாகிவிட்டது!
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை இறையோனை முன்னிறுத்தி உரையாற்றிய தாங்கள், உணர்ச்சி வசப்பட்டு உண்ணாவிரதம் இருப்பேன் என்று இறைவனுக்கும் புனித இஸ்லாம் மார்க்கத்திற்கும் முரணான வார்த்தையை உலரலாமா?
நம் புனித மார்க்கத்திற்கு முரணான பல காரியங்களை மெத்த மகிழ்ச்சியோடு செய்யும் அந்த அரசியல் கட்சியில் இணையப்போகிறோம் என்று முடிவெடுத்தால் உங்களையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு உதிர்ந்த வார்த்தைகளோ?
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross