செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகர்மன்றத் தலைவி அவர்களின் உரையும், அதற்கு ஆதராவாகவும், நடுநிலையாகவும் எதிராகவும் சிலபல் விஷயங்கள் தளத்தில் காண முடிந்தது.
தலைவியவர்கள் தான் மரணிக்கும் வரை உண்ணா நோன்பிருக்கப் போவதாக்ச் சொல்லியிருப்பதை எண்ணிப்பார்க்கும் போது எவ்வளவு அவருக்கு எவ்வளவு மன உளைச்சல் தரப்பட்டுள்ளது என்பது புரிகிறது. மார்க்கத்தில் விலக்கப்பட்ட ஒன்றை ஒரு தீன்தாரி சொல்லியிருக்கிறாரென்றால் அந்தச்சொல் ஏன் வெளியானது என்பதையும் விளக்கப்படவேண்டும். அவர் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார், நாம் தான் அவரை அந்த அளவு உணர்ச்சியின் உச்சத்துக்குத் தள்ளிவிட்டோம். அதற்காக அவர்பிழைபொறுப்புதேடிக்கொண்டுதானிருப்பார். அதை நான் நிச்சயமாக நம்புகிறேன். இறைவன் மிகப் பெரியவன்
நாமும் பிழை பொறுப்பு தேட வேண்டியவர்களே!
நம்மில் எத்தனைபேர் நாம் ஓட்டுப்போட்டுத்தேர்ந்தெட்த்த உறுப்பினர்களைச் சந்தித்து நமது வேதனைகளை யெடுத்துச் சொல்லியிருக்கிறோம்?
ஓட்டுப் போட்டோமல்லவா? அதன் பிறகு இப்படி நல்லவற்றிற்கு குறுக்கே நிற்கிறீர்களே இது நியாயமா? என்னவென்று கேட்டோமா?
இல்லையெனில் ஊர் மொத்தம் கூடி கையெழுத்து வாங்கி முதல்வருக்கு அனுப்பி விடுவோமென்றுதான் ஒரு எச்சரிக்கையாவது தந்தோமா? இல்லையே??
அப்படி நடந்திருந்தால் இப்படி ஒரு வாதமோ விவாதமோ கூட்டமோ நடந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கும் திருந்த ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம்,
அவர்கள் கொடுத்தார்கள்தானே நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் நமக்கு வர வேண்டிய நன்மைகளுக்கு முட்டுக்கட்டையாக கூடிப்போய் மனுக்களைக் கொடுத்தார்களே அதையேன் நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது?
நாம் தேர்ந்தெடுத்தவர்கள் நமக்கே இடையூறாக செயல்படுகிறார்கள் - அதாவது தீட்டின மரத்திலேயே கூர்பார்க்கிறார்கள். நமக்குவலிக்கவில்லையே ஏன்?
ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு மரத்துப் போய்விட்டதா?
இல்லை ஓட்டுப்போடுவது மட்டும்தான் கடமையா?
நாம் வாழ ஓட்டு போட்டோமா? இல்லை அவர்கள் வாழ அஸ்திவாரம் போட்டோமா?
உரிமையைக் கேட்பதில் நமக்கு அவமானமா?
உரிமை மீறுவதுதான் அவர்கள் தார்மீகமா?
கார்மேகம் வந்தால் அது மழைக்கு அறிகுறி
கரும்புகை வந்தால் அது சுவாசத்திற்கு உலை. மூச்சு விட முடியாது,
எதுவேண்டும் கார்மேகமா?
கரும்புகையா?
முடிவு செய்யுங்கள்.
நகர்மன்றத் தலைவியவர்கள் தமிழகத்தை ஆளும் கட்சியான அதிமுகவில் ஊர் நலன் நாட்டு நலன் கருதியும் தன்னை இணைத்துக் கொள்ளப்போவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதும் வாழ்த்தத் தக்கதுமாகும். காரணம் இன்று எத்தனையோ எதிர்ப்புகளுக்கு இடையிலும் பற்றாக்குறைகளிருந்தும் செம்மையாக ஆட்சி நடத்தி வருகிறார். நல்ல திட்டங்களை வகுத்தும் அதை செயல்படுத்தியும் மக்க்ள் பயனடைந்தும் வருகிறார்கள். அதோடு கொடுத்த வாக்குறுதிகளை நிறவேற்றியும் வெற்றிகண்டும் வருகிறார்கள் நம் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்கள்
எனவே அந்தக்கட்சியில் இணவதே சாலச்சிறந்தது வாழ்த்துக்கள் தலைவி அவர்களே!
ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். நாம் ஒரு நதியில் படகினில் பயனித்துக் கொண்டிருக்கிறோம் அப்பொழுது காட்டாற்று வெள்ளம் நம் படகை நிலை தடுமாறச் செய்கிறது. அதே நேரம் அந்த வழியே ஒரு பலம் வாய்ந்த கப்பல் வருகிறது. அந்தக் கப்பல் தலைவனிடம் நாம் உதவிகேட்டு நம் உயிரையும் நமது படகையும் முற்றிலுமாக பாதுகாத்துக்கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம் அதைப் பயன்படுத்துவதுதானே புத்திசாலித்தனமும் பாதுகாப்பும்? அதைவிட்டுவிட்டு எப்படியிருந்தாலும் எனது படகு துண்டு துண்டாகி சின்னாபின்னமாகிப் போனாலும் நான் உதவி கேட்க மாட்டேன் என்று சொன்னால் அது எந்த புத்தியில் சேரும்? மந்த புத்தியிலேயே சேரும்.
நான் நதியென்ச்சொன்னது நம் தமிழகத்தை கப்பலெனக் குறிப்பிட்டது நம் தமிழக அரசை, படகெனச் சொன்னது நமதூர் நகராட்சியை,
எனவே நகர்மன்றத் தலைவி அவர்களே வாய்ப்பிற்காக நீஞ்கள் இடைவிடாது கதவைத் தட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் திறக்கும் நமதூரும், நம் தமிழகமும் நம் இந்தியாவும் வளமும் நலமும்பெறும் இறைவன் நாடுவான் அப்படியே ஆகட்டும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.
அன்பு உறவுகளே நாம் நமது ஆதரவை இயலாத மூத்த வயதினர்களும் திரளாக வந்து ஊர்த் தலைவிக்கு துணையாக நின்றுள்ளோம். ஒருதுளி ஆனந்தக் க்ண்ணீர் வடித்தவனாக மாஷா அல்லாஹ் இறைவா எங்களை இதுபோன்ற எல்லா நர்காரியங்களிலும் ஒன்றுசேர்த்து வெற்றியைத்தந்தருள் ரப்புல் ஆலமீனே ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross