இதன் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்... posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[19 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26357
அன்பு நண்பரே! காயல்பட்டணம் டாட் காம் மெனெக்கெட்டு தினமும் கடற்கரைக்குச் சென்று புகைப்படம் எடுப்பது வெறும் பொழுது போக்கிற்காக அல்ல! நம் வம்சாவழியை துவம்சம் செய்யும் நச்சுப்பொருள் கலந்த கழிவு நீரை கடலில் கலந்து நீலக்கடலை செங்கடலாக மாற்றி மனித வளத்தையும், கடல் வளத்தையும் சூரையாடிக் கொண்டிருக்கும் நமதூருக்கு அருகாமையில் உள்ள உயிர்க்கொல்லி ஆலையின் அட்டூழியத்தை தடுக்கும் விதமாகவும், நமதூர் மக்களின் ஆரோக்கியத்தை ஒடுக்கும் ஈனச் செயலைத் தடுத்து கண்காணிக்கும் விதமாகவும்தான் ஒவ்வொரு நாளும் கடல் காட்சியினை இத்தளம் வெளியிட்டு வருகின்றது. இப்போது தங்களின் எரிச்சல் நீங்கியிருக்கும் என நம்புகின்றேன்.
இப்புகைப்படங்களின் தொடர்ச்சியால் சமீபகாலமாக நம் கடல் தெளிவாகவும், தூய்மையாகவும் இருப்பதை கவனியுங்கள் உண்மை புரியும். ஊர்நலனில் உண்மையான அக்கறையுள்ள இத்தளத்தின் தரம் மென்மேலும் உயர துஆச் செய்யுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக...ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross