செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகளில் தனிநபர் தலையீட்டை ஒழிக்க வேண்டும்! நகராட்சி நிகழ்வுகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேச்சு!! (அசைபடங்களுடன்!!!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
“மாவீரர் திப்பு ஸுல்தான் வேங்கையாகத்தான் வாழ்ந்து மடிந்தார்; கோழையாக அல்ல!” என்னும் வரலாறு கற்பித்த அந்த வீரப் பாடம், சகோதரி ஆபிதா அவர்களின் அந்த எழுச்சியுரையில் மின்னி ஒளிர்ந்ததை உணர முடிந்தது.
நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட பெரும்பான்மையான சகோதரர்கள் “You too Brutus?!” என்று ஒரு கொடை வள்ளலின் பெயரை இணைத்து உச்சரித்து கேவலமாகப் பேசிச் சென்றதைப் பரவலாக நகரெங்கும் காண நேர்ந்தது. அந்த மேடையில், அனைத்து சீர்கேடுகளுக்கும் மூலக்காரணியாக [Root Cause] முன் வைக்கப்பட்ட பெருந்தகை இவர்! முதன் முதலாக, நானும் கூட வியந்தேன்! உச்சாணியில் வைத்து அழகு பார்த்த இவர் பற்றிய என் பிம்பங்கள் பனிக்கட்டியாய் உருகி வழிந்தோடுவதைக் கண்டேன்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி சார்பு / எதிர்ப்பு வட்டங்கள் இருக்கலாம்தான்! கட்டற்ற கருத்துச் சுதந்தரத்தின் வெளிப்பாடுகளே அவை எனவும் நாம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். அதற்காக, வரலாற்றில் சாயமேற்ற வேண்டாமே! உண்மைகள் உறங்கி விடக்கூடாதுதானே! உள்ளது உள்ள படி சொல்லுங்கள்! சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்! மறைப்பதோ, மெழுகு பூசுவதோ நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது தான்!
நாம் இமைமூட, அவனியே இருண்டிடும் என்பது மிகைக் கற்பனை!
தன் மகள் பாத்திமா தவறிழைப்பினும் தண்டனைக்குரியவரே! – இது அண்ணலார் கற்றுத்தந்த அழகிய ஒழுக்கவியல் பாதை!
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே! – இது நக்கீரர்!
அதே நேரத்தில்....,
“சாகும் வரை உண்ணாவிரதம்” என்பதெல்லாம் இந்திய அரசியல் சார்ந்த [idioms] சொல்லடைகளே!
இலங்கைப் போராளி திலீபனைத் தவிர, காந்தி உட்பட எவரும் இப்படி உண்ணாவிரதம் இருந்து செத்ததாக சரித்திரம் இல்லை. இத்தகைய மரபுச் சொற்களை / பூச்சாண்டிகளை ஒரு புறம் ஒதுக்கித் தள்ளிவிட்டு நடுநிலையோடு நோக்கும் போது, இப்புதுமைப் பெண் - சோதனையும், வேதனையும் கடந்து வந்த துணிவான பயணத்தின் இடைவேளையில் - அவர் களமிறங்கியுள்ள தர்மயுத்தத்தில், ஊழலற்ற சமுதாயம் காண விழையும் அவரைப் போன்ற நல்லவர்கள் நிச்சயம் தோற்றுவிடக்கூடாது என்பது தான் என் போன்றவர்களின் ஆவல்.
நடக்குமா?
நிச்சயம் நடக்கும்!
எவ்வாறு அது சாத்தியம்?!
மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது!
எப்படி அதை அடைவது?
மாற்றங்கள் நம்மிலிருந்தே துவங்க வேண்டும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross