Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[21 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26392
"எழுத்துமேடை மையம் "மிக அருமையான ஒரு நிகழ்வு. இதை சாத்தியமாக்கி தந்த "காயல்பட்டணம் .காம் "இணையதள நிர்வாகத்தினருக்கு நமது உளப்பூர்வமான நன்றிகள்.
பொதுவாக வியாபார சமூகம் நிறைந்த நமதூர் போன்ற ஊர்களில் இதுபோன்ற இலக்கியம் சார்ந்த விழாக்களை முன்னெடுப்பது அருமையிலும் அருமை. வேறு வேறு பொழுதுபோக்கு நிகழ்சிகளை விரும்புபவர்கள் இலக்கியம் என்றால் சற்றே முகம் சுளிப்பார்கள்.
அதே சமயம் இலக்கிய தாகம் உள்ளவர்கள் ஆங்காங்கே இலைமறைகாய் போல சமூகத்தில் நிறைய ஒளிந்திருப்பார்கள். அவர்களின் ஆர்வம் இதுபோன்ற நிகழ்வுகளில்தான் வெளிப்படும். அந்த வகையில் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பலரின் முகங்களில் அந்த இலக்கிய பரவசம் மின்னிட்டதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
தோழர் அமீர் அப்பாசின் ஆற்றொழுக்குமிக்க அருமையான, ஆழமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் இன்னும் பெரிய கூட்டங்களில் பேசக்கூடியவர். அந்த கவிஞ்சருக்கு நாம் வழங்கிய நேரமும் மிக குறைவு. அவரை நாம் இன்னொரு முறை மிக சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
அடுத்ததாக மரியாதைக்குரிய அட்மின் அவர்களுக்கு ஒரு சிநேக பூர்வமான வேண்டுகோள்
என்னை எழுத்தாளர் என்று பெருமையுடன் விளித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஆனால் "எழுத்தாளர் "என்ற பதம் மிக விரிந்த பொருள் கொண்டது. ஒரு ஜெயகாந்தன் ஒரு ஜெயமோகன் ஒரு சுஜாதா ஒரு எஸ்.ரா. ஒரு சுந்தர ராமசாமி ஒரு கி.ராஜநாராயணன் ஒரு ஆ.மார்க்ஸ் --இவர்கள் போன்றவர்கள்தான் எழுத்தாளர் என அழைக்க முற்றிலும் தகுதி உடையவர்கள் நான் அல்ல. சும்மா பொழுது போகாமல் எதையோ கிறுக்கி கொண்டிருக்கும் நானும் எழுத்தாளர் ...இவர்களும் எழுத்தாளர் என்றால் எனது பெருமை ஒருபுறம் இருக்கட்டும் .அது இவர்களை சிறுமை படுத்துவது போலாகும்.
எனவே எழுத்தாளர் என என்னை நான் ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. வேண்டுமானால் ..நான் கட்டுரைகள் எழுதுவதால் என்னை "கட்டுரையாளர் "என்று அழைத்துக்கொள்ளுங்கள்.
இதை நான் அடக்கம் கருதி அல்ல .உண்மையாகவே சொல்லிக்கொள்கிறேன்.
விழாவில் என்னை மேடையேற்றி கவுரவம் செய்ததற்கு நன்றி....!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross