Re:...அது ஒரு கனா காலம் posted bymackie noohuthambi (kayalpatnam)[21 March 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26393
1983 இல் தம்மாம் காயல் நல மன்றம். 1994 இல் ரியாத் காயல் அலையன்ஸ் கமிட்டி காஹிர் பைதுல் மால். ஏதாவது ஒரு நண்பர்களின் வீட்டிலேதான் கூட்டங்கள் நடைபெறும். 5, 10 ரியால்கள் வசூல் செய்ய பெரிய பாடு. கூட்டம் ஏற்பாடு செய்ய பகீரத பிரயத்தனம், பிரசவ வேதனை. கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிய கூட்டம் வரவேண்டுமே என்ற ஆதங்கம், கவலை. எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டால் முக மலர்ச்சி அக மலர்ச்சி. அதை தொடர்ந்து விருந்தோம்பல். மறக்க முடியுமா. எவ்வளவு வேலைப்பளுவுக்கு மத்தியில், லீவு கிடைக்க பெரும்பாட்டுக்கு மத்தியில் இப்படி ஒரு கூட்டம் வருடம் ஒரு முறை பெருநாள் சமயத்தில் கூடுவோம். அது ஒரு கனா காலம்.
இப்போது எவ்வளவு பெரிய அரங்கம். குளிரூட்டப்பட்ட அறைகள், லட்சக் கணக்கில் நலத்திட்ட உதவிகள். எப்படி இவை எல்லாம் சாத்தியம் ஆகியது என்று நினைத்து பார்த்தபோது ஒரு விஷயம் தெளிவாகிறது.
கடல் கடந்து வாழும் இவர்களுக்கு காயல்பட்டணம் நமது ஊர் , இந்தியா நமது நாடு, இஸ்லாம் நமது மார்க்கம், நாம் எல்லோரும் சகோதரர்கள் என்ற உயர்ந்த சித்தாந்தம். உலகளாவிய GLOBALISM என்ற தத்துவம் இவைர்களை ஒன்றிணைக்கிறது. இது இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடன் நீர்த்துப் போகும் மர்மம் என்ன ஒரு புரியாத புதிருக்கு அன்று முதல் இன்று வரை விடை கிடைக்கவில்லை. கண்டவர்கள் விண்டதில்லை, விண்டவர்கள் கண்டதில்லை.
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன். அந்த அல்லாஹ்விடம்தான் கேட்கவேண்டும். தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே தேங்காயை போல் இருக்கும் அந்த வல்லவனிடமே கேட்கிறேன். அவனும் தெளிவாக சொல்லத்தான் செய்கிறான். vauthasimoo b hablillaahi jamee aa. valaa thafarraqoo....நாம் தான் தவறிக் கொண்டிருக்கிறோமா...தவறு எங்கே நடக்கிறது... உள்ளங்களை சீராக்குவோம். பேதைமை நீக்குவோம். இவர்களை போல் வாழ முயற்சிப்போம். வெற்றி கனிகளை பறிப்போம். இந்த ஊருக்கு அதனை உரமாக்கி, நமது சந்ததிகள் நல்வாழ்வு வாழ செய்வோம். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross