Re:... posted byVilack SMA (HCM)[01 April 2013] IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 26599
கால் நூற்றாண்டு முன்புவரை நமதூரில் மண்பாண்ட உபயோகம் இருந்ததுதான் . என்றைக்கு நாம் அடுப்பங்கரைக்கு Tiles ம் Mosaic ம் போட்டு அழகு பார்த்தோமோ , அன்றோடு மண் பாண்டமும் போச்சு . நமது ஆயுளும் குறைந்து போச்சு .
வயல் வெளியில் வேலை செய்யும் விவசாயி இன்றைக்கும் மண்பாண்ட பொருட்களைத்தான் உபயோகிக்கிறான் , ஆரோக்கியமாகவும் இருக்கிறான் . அவன் வீட்டருகில் ஆலைகள் பல இருந்தும் , ஆரோக்கியமாகத்தான் இருக்கிறான் . நாமோ , அந்தஸ்து என்ற பெயரில் நவீன யுக்திகளை கையாண்டு , நமது ஆயுளை நாமே குறைத்து கொள்கிறோம் . படத்தில் காட்டப்பட்ட பனை ஓலை பொருட்கள் .... இன்று மியூசியத்தில் வைக்கப்படும் பொருட்கள் போல ஆகிவிட்டது . இவைகளை இன்னும் வைத்திருப்பவர்கள் ஏதோ பொருளாதாரத்தில் நலிந்தவர் போல எண்ணப்படுகிறார்கள் .
நமதூர் கல்யாண விருந்தில் , சிட்டி கறி , கலய தண்ணீர் பாரம்பரியமாக உபயோகப்பட்டு வந்தது . ( சற்று சுத்தத்தை பேணியிருந்தால் இன்றுவரை தொடர்ந்திருக்குமோ ? ) வெளியூர்காரர்கள் ஆச்சரியத்தோடு விசாரிப்பார்கள் . நாமும் நமது பாரம்பரியத்தை பற்றி பெருமையாக சொல்வோம் . சந்தோசமாக இருக்கும் . இன்று அதெல்லாம் போச்சு . இன்று யாராவது சிட்டி கறியும் , கலய தண்ணீரும் வைத்தால் , உண்ட சாப்பாடு செரிக்கும் முன்னரே அவருடைய அந்தஸ்தை பற்றி , தெருவில் பேசிக்கொண்டிருப்பார்கள் .
நோன்பு திறக்கும்போதுகூட இன்று பள்ளிகளில் Plastic Bowl கலாசாரம் .
இன்று பெரிய நகரங்களில் , மண் சட்டியில் செய்த சாப்பாடு என்று கிடைக்கிறது . 500 ரூபாய்க்கு குறையாமல் இருக்கும் . அழகழகான சிறிய பெரிய மண் சட்டிகளில் பதார்த்தங்களை பரிமாறுவார்கள் . அங்கே சென்று சாப்பிடுவதை அந்தஸ்தாக நினைக்கும் நாம் , அதே மண் சட்டியை வீட்டுக்குள் வைத்தால் மானம் போயிடும் என்ற நினைப்பு .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross