Re:...மறு மலர்ச்சியின் பங்காளிகள் posted byசாளை பஷீர் (சதுக்கை தெரு , காயல்பட்டினம்)[06 April 2013] IP: 180.*.*.* India | Comment Reference Number: 26724
பாரக்கல்லாஹ் ! வரவேற்புகளும் வாழ்த்துக்களும் !!
நமதூரில் தப்லீக்கிற்கு மர்கஸ் வந்து சில மாதங்களிலேயே இஜ்திமாவும் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கின்றது.
நான் எனது சிறு பருவத்தில் ஒரு நாள் ஜமாஅத்தில் சென்றுள்ளேன். அத்துடன் ஜுமேராத்திலும் கலந்துள்ளேன்.
தப்லீக் ஜமாஅத் தோன்றி கிட்டதட்ட 80 ஆண்டுகள் ஆகின்றன.
---- இத்தனை வருடங்களில் இயக்கம் பிளவுபடவில்லை. போட்டி அணிகள் இல்லை.
--- தனி ஆள் ஆதிக்கம் இல்லை.
--- தேர்தல்களும் இல்லை. குழுக்களும் இல்லை.
--- வரவு செலவு இல்லை . அதனால் ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை.
--- விமர்சனங்களையும் அவதூறுகளையும் எதிர் விமர்சனங்களால் , மூன்றாந்தர சொற்களால் எதிர் கொள்ளாமல் மௌனமாக கடந்து செல்வது.
--- தன் கைக்காசை போட்டு பணி புரிதல்.
--- மஸ்ஜிதுகளை மட்டுமே மையமாக கொண்டு பணியாற்றுதல்.
--- யாருக்கும் எந்த வித தனி அந்தஸ்தும் இல்லை.
---எளிமையான வாழ்க்கை முறை , நாடோடி பயண முறை
--- யாருடைய செல்வாக்கிற்கும் ஆட்படுவதில்லை.
--- வண்ண வண்ண சுவரொட்டிகள் இல்லை . பக்கம் பக்கமாக துண்டறிக்கை இல்லை. காதை பிளக்கும் ஊர்தி பரப்புரையும் இல்லை.
அப்பாவி விளிம்பு நிலை முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு தொலைவில் இருப்பதை கண்டும் , ஹிந்துத்வ சக்திகளால் அவர்கள் மத மாற்றம் செய்யப்படுவதைக்கண்டும் மனம் வெதும்பிய சீரிய உள்ளங்களின் விளைவாக பிறந்ததே ஜமாஅத்துத் தப்லீக்.
இன்று உலகெமெங்கும் சீரான வலைப்பின்னலுடன் உள்ள ஒரே இஸ்லாமிய அமைப்பாகவும் மக்கள் அமைப்பாகவும் பரவியுள்ளது.
தப்லீக் ஜமாஅத்தின் துணை விளைவாக நாடு முழுக்க ஒரே பாட திட்டத்தின் கீழ் நடக்கும் குர்ஆன் மக்தபுகளும் சாத்தியமாகியுள்ளன.
இத்தனை சிறப்புகளும் பெருமைகளும் பின்னணியும் வாய்ந்த ஜமாஅதுத் தப்லீக் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளின் செயலாக்கத்திற்காக உழைக்கும் ஜமாஅத்துத் தப்லீக்கைப் போன்று பல்வேறு துறைகளில் உழைக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றன.
தப்லீக் உட்பட இந்த அமைப்புகள் அனைத்தும் சம கால இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கும் எழுச்சிக்கும் தங்கள் உழைப்பை நல்கும் பங்காளிகள் என சாமானியர்களாகிய நாங்கள் கருதுகின்றோம்.
அத்தகைய இயக்கங்களுடனும் ஜமாஅத்துத் தப்லீக் அடிப்படை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
அப்போதுதான் ஜமாஅத்துத் தப்லீக் என்பது இறுக்கமான ஒரு அமைப்பு... தங்களது சாத்திகளுக்குள்ளேயே ( தோழர்கள் ) மட்டும்தான் சகோதரத்துவத்தைப் பேணுபவர்கள் என்ற குற்றச்சாட்டை இல்லாமலாக்க முடியும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தஃவாவில் ஒன்றுபடும் உள்ளங்களாக நம் அனைவரையும் ஆக்குவானாக !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross