நல்ல தீர்மானங்கள் மூலம் ஐயப்பாடுகளை நீக்கலாம் ! posted byM.S.Kaja Mahlari (Singapore)[06 April 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26725
இன்று உலகில் இஸ்லாமிய அழைப்புப்பனிகளில் ஈடுபடுகின்ற இயக்கங்களில் "தப்லீக் இயக்கமும் " ஒன்று . இந்த இயக்கத்தில் தலைமைக்கு (மர்கஸ்) கட்டுப்படும் நடவடிக்கைகள் இன்றும் சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது !
ஏனைய இயக்கங்கள் , ஜமாஅத்களில் இத்தகைய கட்டுப்பாடு முழுமையாக பின்பற்றப்படவில்லை . !
அதே நேரத்தில் இந்த இயக்கம் பற்றியும், இந்த இயக்கத்தின் தலைவர்கள் தங்கள் நூற்களில் , சொற்களில் கூறிய கூற்றுக்கள் பற்றியும் இஸ்லாமிய "அஹ்லுஸ் சுன்னாஹ் வல் ஜஅமாஅ" அறிஞ்சர்கள் இன்றும் மறுப்புரைகளும், ஆட்சேப்பனைகளையும் தெரிவித்து வருகிறார்கள் !
ஆனால் அதற்கெல்லாம் இந்த இயக்கத்தை பின்பற்றும அறிஞ்சர்களோ, அல்லது இந்த இயக்கத்தின்
(மார்கஸ்) தலமைபீடமோ ஒரு சரியான , நிரந்தரமான , ஒரு தெளிவான மறுப்பையோ, பதிலையோ கூறி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை !
வெளிரங்கத்தில் இவ்வியக்கத்தாரின் அமல்கள் , செயல்பாடுகள் இவைகளைக் கவனிக்கும் பொதுமக்களுக்கும் இவர்களது கொள்கை நிலைபாடு என்ன என்பது குறித்து தீர்மானிக்க முடியாமல் தவித்தே வருகிறார்கள்!
ஆகவே ! இந்த இஜ்திமா மாநாடு மூலம் அதற்க்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வை, முடிவை தீர்மானம் மூலம் வெளியிட்டால் பொதுமக்களுக்கு இந்த இயக்கத்தின் மீதுள்ள ஐயப்பாடுகள் தெளிவாகும் !
அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்த மாநாட்டின் இறுதியில் " முஸ்லிம்களுக்காக , இஸ்லாமிய சமுதாயத்தின் " நலனுக்காக மாநில, மத்திய அரசாங்களை வலியுறுத்தி நல்ல தீர்மானங்களை மாநாட்டின் வாயிலாக கேட்டுக்கொள்ளலாம் !!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross