செய்தி: துபை கா.ந.மன்ற ஏற்பாட்டில், களிப்புடன் கொண்டாடப்பட்டது காயலர் தினம் 2013! வியப்பிலாழ்த்தி, பார்வையாளர்களை கண் கலங்கச் செய்தார் காயல் க்ராண்ட் மாஸ்டர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 April 2013] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26734
களிப்புடன் கொண்டாடி முடிந்த, துபை கா.ந.மன்றத்தின், காயலர் தினம் 2013 திற்கு நல்-வாழ்த்துக்கள்.
இந்த நிகழ்வுகளை பார்க்க பார்க்க பொறாமையுடன் கூடிய சந்தோசம் வருகின்றது.
நாங்கள் வசிக்கும் சவுதி அரேபியாவில் இது மாதிரியான ஒன்று கூடுதல் எல்லாம் சாத்தியமே இல்லை. ஒவ்வொரு கூட்டத்தையும் மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு, ஒருவித பயத்துடன்தான் நடத்தவேண்டியது உள்ளது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள், அல்ஹம்து லில்லாஹ்.
- ஒவ்வொரு புகைப்படங்களையும் பார்க்கும் போது பூரிப்பாக உள்ளது. அனைவர்களின் முகத்திலும் எவ்வளவு சந்தோசம். மனம் ஒன்றிய புன்னகை அனைவர்களின் முகத்திலும் ஓடுகின்றது. இந்த உலகில் வேறு என்னையா வேண்டும் மனிதனுக்கு.. இந்த சந்தோசம்தானே.
- குட்டி குட்டி மலர்களின் முகங்களிலும் எவ்வளவு சந்தோசம். கலப்படம் இல்லாத சிரிப்புகள்.
** இந்த நிகழ்வில் இரண்டு காமடிகள்.. ரசித்து சிரித்தேன்.
" உரி அடித்தல், சாக்கு ஓட்டப்பந்தயம் போன்ற ‘வீர விளையாட்டு’ப் போட்டிகள் ".
- உங்களுக்கு இந்த போட்டிகள் எல்லாம் வீர விளையாட்டா..? ஒரு காளை மாட்டை ஓடவிட்டு பிடிக்கலாம் அல்லவா.
" நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டுக்காரர்கள் ஓடுவதை மகளிர் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர் "..
- திருமணத்திற்கு முன்பு சுறுசுறுப்புடன் ஆட்ட ஓட்டத்துடன் இருந்தவர்களை, இப்படி ஆக்கிவிட்டோமே என்று கவலைப்பட்டு இருப்பார்கள். இனி சுதந்திரம்தான் அனைத்து ஆடவர்களுக்கும்...! சரிதானே சாளை சலீம் காக்கா. ச்ச்..சும்மா.
*** காயல் க்ராண்ட் மாஸ்டர் உம்மு உமாரா, எப்படி பாராட்டுவது என்றே புரியவில்லை. இந்த குழந்தையை எப்படி பாராட்டலாம் என்று யோசித்தே, ஒரு நாள் கடந்துவிட்டது, கருத்து எழுதுவதற்கு.
வல்ல அல்லாஹ், இந்த குழந்தையை எல்லா விதத்திலும் அவனுக்கு பிடித்தமான, அபிவிருத்தி நிறைந்த குழந்தையாக ஆக்குவானாக. பெற்றோர்களுக்கு ஸ்பெஷல் பாராடுக்கள். தம்பி ஸர்ஜூனின்.. சூப்பர்.. உன்னை நினைத்து துஆ செய்து பூரிக்கின்றேன்.
பரிசு கொடுத்த ராவன்னா அபுல் ஹசன் ஹாஜியார் அவர்களுக்கும் நன்றிகள். இந்த குழந்தைக்கு நீங்கள் ஒரு பிளாங் செக்கே கொடுக்கலாம். !!
- டிவி-இல் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற நிகழ்ச்சியை பார்த்த பின்புதான், நம் மக்கள் எவ்வளவு புத்திசாலியாக இருக்கின்றார்கள், நம் கல்விக் கொள்கை எவ்வளவு சிறப்பாக உள்ளது என்று அறிய முடிகின்றது. "சொல்லுங்க காக்கா சொல்லுங்க" எப்படி.. அப்படிதானே. யூடியூபில் பதிவு உள்ளதா..?
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்த கேம் அங்கிள், சகோ. எம்.ஏ.ஸாஜித், சுப்ஹான் காக்கா முதல் அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிகள்.
தொடரட்டும் உங்களின் சந்தோசம், இந்த ஒற்றுமை, மனம் நிறைந்த பூரிப்பு, ..மற்றும் மக்களின் தொடர் சேவை.. வல்ல ரஹ்மான் அங்கீகரித்த வழியில்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross