கிடைத்த பாக்கியம் posted byNIZAR (KAYALPATNAM)[09 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26777
இஜ்திமாவின் ஒவ்வொரு அசைவையும் அழகான செய்தாகி தந்துள்ள இணையதளத்துக்கு இனிய வாழ்த்துக்கள். எடுக்கபட்ட புகைப்படங்கள் படங்களின் அழகையும் உயர்த்தி இருக்கிறது.
இந்த இஜ்திமா நம் ஊருக்கு கிடைத்த பாக்கியம் என்பதினால் நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தும் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சகோதரத்துடன் அனைவரும் கலந்து கொண்டது நெஞ்சை தொடுவதாக இருந்தது. எந்த ஒரு விளம்பரமும் இன்றி இத்தனை மக்கள் பெருவெள்ளம் காயல் மக்களை மலைக்க வைத்தது எனலாம்.
இந்த நிகழ்ச்சயில் நடைபெற்ற பயான்கள், நம்மிடையே இருக்கும் அமல்களின் குறைபாடுகள், குழந்தை வளர்ப்பு, தொழுகையின் சிறப்புகள், குரான் ஓதுவதின் சிறப்பு போன்றவற்றை
பற்றி இருந்தது. எதிர்பார்க்காத வெளியூர் விருந்தாளிகளின் கூட்டம் காயலை மூச்சு முட்ட வைத்தது. இப்படி ஒரு கூட்டத்தை காயல் இதுவரை சந்தித்ததில்லை என பெரியவர்கள் சொன்னார்கள்.
விழா முடிந்ததும் திருநெல்வேலி டிப்போவில் புக் பண்ணி இருந்த 250 பஸ்களின் அணிவகுப்பு காயல்பட்டினத்தில் ஒரு கோயம்பேடு பஸ்டாண்ட் வந்து விட்டதா என தோன்றியது.
இஜ்திமா பந்தலில் இருந்து கடற்கரைக்கு சாரை சாரையாக மக்கள் சென்றது புதுமையாக இருந்தது. இஜ்திமாவின் கட்டமைப்பு ஏற்பாடுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின.
இஜ்திமாவில் போடப்பட்ட சாப்பாடு பசிக்கு தானே தவிர ருசிக்கு இல்லை என்று பயான் செய்தவர் குறிப்பிட்டது குறிப்பிடதக்கது.
வெளியூரில் இருந்து விருந்தாளிகளாக நம் சமுதாய மக்கள் வந்திருக்கும் சமயம் இஜ்திமாவை குறிப்பிட்டு சில கேள்விகள் என்ற வால்போச்ட்டை சிறிதும் கண்டுகொள்ளாமல், அதை பற்றிய செய்தியை போடாமல் சமூக பொறுப்புடன் நடந்து கொண்ட காயல் பத்தனம் இணையத்தளம், காயலின் அனுபவம் பெற்ற முதல் இணையத்தளம் என்பதை நிரூபித்து உள்ளது.
இஜ்திமாவில் கேட்கபற்ற துஆவை இறைவன் கபூல் செய்து நம் ஊர் மக்களை நிலை குழைய வைக்கும் உயிர்கொல்லி நோயை நம் ஊரை விட்டும் இல்லாமல் ஆக்கிவிடுவானாக ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross