சிலந்திக்கு பிடித்த கலயம்,,,, posted byNIZAR (KAYALPATNAM)[17 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26908
ஹிஜாஸ் மைந்தனே எப்படியா? இதல்லாம், எங்கு இருந்துயா இந்த மாதிரி தகவல் தருகிறீர்கள், ஊட்டசத்துக்களை உஸ் எனும் ஓசை மூலம் வெளியாக்கி சக்கையை தின்பது என்ற வரிகள் கட்டுரையை என்னோடு படித்த அனைவரையும் குப்பென்று சிரிக்க வைத்தது.
நண்பன் வீட்டில் சாலட் சாப்பிட்டது எல்லாம் சரிதான்,
ஆனால் அவர் செய்த ஒரு தவறு என்ன தெரியுமா? மண் குவளையில் இலந்தயிரை தந்ததுதான். அந்த ருசிதான் மண்பாண்டங்கள் பற்றி கட்டுரையை எழுத உசிப்பிவிட்டது என எண்ணுகிறேன்.
பானையே 68 சொல்லுகிறீரே, எங்காவது கிராமத்தில் மண்பாண்ட கடயில் வேலை செய்தீரா? படிச்சு முடியலப்பா? இரண்டு மூன்று பானை கேள்விப்பட்டுள்ளோம். இப்படியா?
என வியக்க வைத்து விட்டீர்.
கட்டுரையில் கருவாக மண்பாண்டங்கள் புழக்கம் இல்லாததும், அழிந்து வருவதும், அதனால் ஏற்பட்ட ஆரோக்கியம் என அசத்தி உள்ளீர்.
உங்கள் கருத்துகளை வாழ்தாதவர் யாரும் இருக்க முடியாது.
ஆனால் எதார்த்தம் என்ன? முதலில் உங்கள் வீட்டில் இருக்கிறதா?நம்மை விட அதிகம் புழங்கிய மாற்று மத சகோதரர்கள் வீட்டில் கூட இல்லையே? சம்பிரயத்துகாக பொங்கலுக்கு பானை வாங்குவதோடு சரி. நம் திருமண விருந்துகளில் இருந்த மன்சிட்டிகள், தண்ணீர் கலயங்கள் மாறுவதற்கு முக்கிய காரணம் சுகாதாரகேடுதான். ஒரு தடவை உபயோகித்த மண்சிட்டி, கலயங்களை துடைத்து மீண்டும் பள்ளியில் ஒரு ஸ்டோர் ரூமில் வைப்பார்கள்,
அதை சிலந்தியும், பூச்சிகளும்தான் தங்கள் இடமாக்கி கொள்ளும். மீண்டும் கல்யாணதிட்கு ரோட்டில் அடுக்கபட்டு சரிவரகூட கழுவாமல் மீண்டும் உபயோக படுத்தப்படும்.
வெளிநாடுகளில் இந்த மண்பாண்டங்கள் ஒரு தடவை தான் உபயோகிக்கபடுகிறது. ஏனனில் அதிலிருந்து தூசிகள் உதிர ஆரம்பித்துவிடும். சுவையும், ஆரோக்கியமும் இருந்தாலும்
அதை கையாளும் ஒழுங்குமுறை நம்மிடம் இருப்பதில்லை.
பொதுவாக இது போன்ற மன்சிட்டிகள், கலயங்கள் ஒருமுறை மட்டும் பயன் படுத்துவதாக இருந்தால் சுகாதார கேடுகள் இல்லாமல், நல்ல ருசியையும் ஆரோக்கியத்தை தரும் மண்பாண்டங்களை உபயோகிக்கலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross