ஊடகத்தின் வேலை என்ன? செய்தியை செய்தியாக தருவது தானே? posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[21 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 26993
அன்பு நண்பர்களே! விருப்பு வெறுப்பு காய்த்தல் உவத்தல் என்பதெல்லாம் காயல்பட்டினம் டாட் காமிற்கு கிடையாது. செய்திகளின் தரம் குன்றி விடவுமில்லை.
வேலை பளு காரணமான செய்தி வர தாமதமானால் என் போன்றோருக்கு ஏற்படும் ஏக்கத்தை நான் மக்காவிலிருந்த காலங்களில் உணர்ந்திருக்கின்றேன். இத்தளத்தின் நிர்வாகிகள் வெறும் நேரப்போக்கிற்காகவோ, கேளிக்கைக்காகவோ நடத்தி வரவில்லை! வெறும் மூன்றே நிமிடம் நுனிப்புல் மேயும் நமக்கே இப்படி என்றால் ஒரு செய்தியை சேகரித்து அதன் நம்பகத்தன்மையை அறிந்து நடந்ததை நடந்ததாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே ஊடகத்தின் வேலை. செய்தியை போட்டு விட்டு அடிக்குறிப்பில் தன் கருத்தைச் சொல்லுவது செய்தியின் தன்மையை அழித்து விடும்.
இது தொடர்பான முந்தைய செய்தியை யாரோ ஒருவர் சொல்லக் கேட்டு ஏனோதானோ என செவிவழிச் செய்தியாக இவர்கள் வெளியிடவில்லை. பொறுமையாகப் படித்துப் பாருங்கள் புரியும்.
ஒருவருக்கு இரத்தக்காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர் வாக்கு மூலத்தை கேட்டறிந்து அதனை முதல் தகவல் அறிக்கையாக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர்தானே செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்? இதனால் இணையதளத்திற்கு என்ன லாபம்? யாருக்கும் ஆதரவாக வெளியிடவில்லையே?
சரி! மறுப்பு செய்தியை மறுதரப்பினர் அறிக்கையாக தந்து தமது நியாயத்தை வெளிப்படுத்தியிருப்பதை மறு நாளே வெளியிட்டு மக்களுக்கு அறிய தரவும் செய்துள்ளனர். இதில் செய்திகளின் தரம் எங்கே குறைந்துவிட்டது?
தினமலருக்கு நிகராக சித்தரிப்பதும் முடுக்குச் சண்டை கூட செய்தியாக வரலாம் என அனுமானிப்பதும் ஏற்புடையதல்ல! முடுக்குச் சண்டை சிவில் பிரிவினைச் சார்ந்தது. அதே நேரம் கைகலைப்பு வெட்டு குத்து காயம் உயிழப்பு என கிரிமினலாக (அல்லாஹ் பாதுகாப்பானாக) மாறும்போது அதுவும் செய்தியாகத்தான் நாழிதழ்கள், தொலைக்காட்சி, போன்ற ஊடகங்களில் வெளிவரும். அப்போது முடுக்குத் தகறாறும் முதல் பத்தியிலும் தலைப்புச் செய்திகளாகவும் இடம் பெரும்.
எனவே ஒரு செய்தியை செய்தியின் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும். அதைத் தவிர்த்து ஊடகத்தின் உழைப்பை சாடுவதோ கொச்சைப்படுத்துவததோ தரமான வாசகர்களுக்கு உகந்தல்ல!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross