செய்தி: நாளை (ஏப்ரல் 29) முதல்வருக்கு நன்றி கூறி சிறப்புக் கூட்டம் மற்றும் காயல்பட்டினம் நகராட்சியின் ஏப்ரல் மாத சாதாரணக் கூட்டம் நடைபெறுகிறது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நம்ம ஊரு சின்ன ஊராச்சே... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[30 April 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27124
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்களே!
” கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாத சகோதரர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி எழுத்து மூலம் தமக்கு வேண்டிய தகவலை எழுதி கேட்டு பதிலை தெரிந்து கொள்வது காலத்தின் அவசியமாக உள்ளது “ என்று கருத்து எழுதி இருக்கிறீர்கள் நல்ல செய்திதான்.
நம்ம ஊரு சின்ன ஊராச்சே - தகவல் அறியும் உரிமைச் சட்டம் நம்ம ஊர் நகராட்சிக்கும் பொருந்துமா ? நம்ம ஊர் நகராட்சிக்கு எழுதிக்கேட்டால் பதில் தருவார்களா ? சுமார் எத்தனை நாட்களில் பதில் கிடைக்கும்.
இதை எப்படி கேட்க வேண்டும் , யாரிடம் கேட்க வேண்டும் , இதை போஸ்ட் கார்டில் எழுதலாமா ? இல்லை வெள்ளைப் பேப்பரில்தான் எழுத வேண்டுமா ? அல்லது இதற்காக பணம் எதுவும் கட்ட வேண்டுமா ? பதில் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் விவரமாக எழுதினால் தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்வார்கள்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நீங்கள் ஏதாவது கேட்டு உங்களுக்கு பதில் கிடைத்துள்ளதா – விவரம் தந்தால் உதவியாக இருக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross