செய்தி: நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டம்! காரசாரமான விவாதங்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நகராட்சி சட்டவிதிகளின்படி... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[03 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27181
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
நகர்மன்ற தலைவர் அவர்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர்கள் 18 நபர்களுக்கும் ஓர் வேண்டுகோள்!
நகர்மன்றத்தில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அதை முறையாக அரசுக்கும், அரசுத் துறைக்கும் நகராட்சி சட்டவிதிகளின்படி அனுப்பிடச் செய்யுங்கள் அதுதான் சிறந்தது.
நகராட்சி விதிகளை மதிக்காமல் சூழ்நிலைகளுக்கேற்ப , உங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளுக்கு தகுந்த மாதிரி செயல்படுத்தினால் அது நகராட்சியின் செயல்பாட்டை இழக்கச்செய்திடும் , நம்பகத்தன்மையை மாற்றிவிடும் என்பதை மறந்திட வேண்டாம்.
-----------------------------------------
இக்கூட்டத்தின் தீர்மானத்தை , எந்த தனிநபரும் ஆதாயம் அடையாதிருப்பதற்காக , தமிழக முதல்வர் அவர்களுக்கு நகராட்சி ஆணையர் அவர்கள் நேரிடையாக அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆணையர் அவர்கள் நேரிடையாக அனுப்புவதற்கு நகராட்சி விதிகள் இடம் கொடுக்காது – நகர்மன்ற தலைவர் மூலம்தான் அனுப்ப முடியும். இந்த விதியை சில காலமாக நகராட்சி மன்றம் பின் பற்றாமல் நடந்து வந்திருக்கிறது – இப்போதைய ஆணையர் அவர்கள் இதை அறியாமல் அல்லது அறிந்தும் சிலரால் தடுக்கப்பட்டு, தவறான வழிகாட்டலில் செயல்பட்டிருக்கிறார் என்பதை அறியமுடிகிறது.
எனவே, நமது ஆணையர் அவர்கள் நகர்மன்ற தலைவர் மூலமே அரசுடனான பரிவர்த்தனைகளை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
-----------------------------
என்னுடையக் கருத்து ஏதோ தலைவருக்கு சாதகமாக இருப்பதாக நினைக்க வேண்டாம் – நகராட்சி விதிப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை பதிகிறேன். தலைவராக இருப்பது சகோதரி ஆபிதா என்பதற்காக அல்ல அந்த இடத்தில் யார் இருந்தாலும் அது ஆமினாவாகவோ, அப்துல் காதராகவோ , அப்துல்லாஹ்வாகவோ யாராக இருந்தாலும் என்னுடைய கருத்து இதுவாகத்தான் இருக்கும்.
இந்த தீர்மானத்தை தலைவர் அல்லது உறுப்பினர்கள் என்று யாராவது கையிலெடுத்துக்கொண்டு நேரிடையாக போய் கொடுப்பதை தவிர்த்து, நகராட்சியிலிருந்து தபால் மூலம் அனுப்புவது என்பது வரவேற்கத்தக்க வேண்டியதே!. ஆனால் அதில் விதியைத்தான் முறைப்படி பின்பற்ற சொல்கிறேன்.
எனவே நகர்மன்றம் சிறப்புடன் செயல்பட அதன் விதிகளை முறையாக கடைப்பிடிப்பது தலைவர் , உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் அனைவர்மீதும் கடமையாகும். அதை அனைவரும் பின்பற்றி நடக்க வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross