Re:...பயண கட்டுரை.. posted bymackie noohuthambi (ooty)[03 May 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27182
இதயம் பேசுகிறது என்ற ஒரு இதழில் திரு மணியன் அவர்கள் பயண கட்டுரை எழுதுவார்கள். படிக்கும்போது எங்கே போகாவிட்டாலும் இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் சென்று வரவேண்டும் என்ற ஆசை துளிர் வீடும். ஆனால் என்னைபோன்ற ஏழைகளுக்கு அது எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.
இலங்கை மட்டும் எனது தந்தை தந்த நட்பு வட்டங்கள், எனது தந்தையின் தந்தை விட்டு சென்ற உறவுகளின் வட்டங்கள் எட்டும் தூரத்தில் வெறும் 8 ஆயிரம் ரூபாய்களில் போய்விட்டு வரக்கூடியதாக உள்ளது. விசா பிரச்சினையும் இல்லை. அங்குள்ள விமான நிலையத்திலேயே ஒரு மாதம் விசா தருகிறார்கள். எனக்கு சிங்களத்தில் பேசி சமாளிக்கும் முறையும் தமிழ் ஆங்கிலம் அங்கு சரளமாக பேசப்படுவதால், விலைவாசிகளும் நமதூர் கணக்கிலேய்லே இருப்பதால் சமாளிக்க முடிகிறது. அங்கு விலை அதிகம் என்று நினைத்தாலும் exchange rate பார்த்தால் எல்லாம் ஒன்றுதான். விரும்பியதை சாப்பிடலாம் நமதூர் மாதிரி நல்ல இயற்கை சூழல்கள்..உபசரிப்பவர்கள் ஒரு புன்சிரிப்போடு அதை செய்கிறார்கள், விருந்தாளிகள் வந்தால் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள்.
இதே நிலை சிங்கப்பூர் மலேசியா வில் இருப்பதாக தெரியவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறை, அணுகுமுறைகளை ஆசிரியர் சொல்லியிருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.விசா எடுப்பதில் உள்ள சிரமங்கள், தங்குவதற்கு இடம் தேடுவதில் உள்ள சிரமங்கள்..ஆசிரியர் BORN WITH SILVER SPOON என்று சொல்வார்களே அந்த உயர் குடியை சேர்ந்தவர் என்பதால் அவரை கை நீட்டி ஆரத்தழுவ நமதூர் காயல் நல மன்றங்கள் கூட முன் வரலாம்.
எனவே வெறும் அரசியல் பற்றி எழுதுவதை விட சாமானியர்களும் அந்த நாட்டுக்கு சென்று வர என்னென்ன தேவை படும் என்று எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இப்போதும் காலம் கடந்து விட வில்லை..பயணக் கட்டுரை தொடர் என்று அவைகளை எழுதினால் நல்லது.
நமது பயண கட்டுரைகள் மற்றவர்களுக்கு அங்கு போக வேண்டும் என்ற ஆசையை தூண்ட வேண்டும். மற்றப்படி அரசியல் உள்ள காலம் எல்லாம் ஊழல் இருக்கவே செய்யும். மூக்கு உள்ளவரை சளி இருக்கவே செய்யும். ஆட்சி மாற்றங்களால் ஊழல் கை மாறுமே தவிர ஊழல் மாறாது. ஊழல் செய்யும் தந்திரங்கள் உபாயங்கள், வழி முறைகள் மாறும். இது இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழல்.
இஸ்லாமிய ஆட்சிகள் கூட அப்படிதான். இஸ்லாமியர்கள் உலகில் நிறையப்பேர் இருக்கிறோம் ஆனால் இஸ்லாம் சொன்னபடி நாம் வாழ்கிறோமா எனபது MILLION DOLLAR QUESTION.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross