செய்தி: மதிய உணவு இடைவேளை என விருப்பப்படி ஓய்வெடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள்! வாடிக்கையாளர் முறையீட்டைத் தொடர்ந்து சேவையைத் தொடர்ந்தனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விழிப்புணர்வு வேண்டும் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[19 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2727
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த வங்கியின் நம் ஊர் கிளையை பொறுத்தவரை எந்த காலத்திலுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. பஜாரில் ஆராம்பள்ளித் தெருவுக்கு
எதிர்புறம் IOB கிளை இயங்கிக் கொண்டிருந்தபோது 80 தின் ஆரம்பத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்தது இருந்தாலும் இப்போது உள்ள அளவுக்கு மோசமாக இருந்ததில்லை.
எனக்கும் ஒரு சம்பவம் 1980 தின் ஆரம்பத்தில் நடந்தது :
என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஒரு செக் கையெழுத்திட்டு வழமையாக கொடுப்பது போல் கொடுத்தேன், கவுண்டரில் உள்ளவர் கையெழுத்தை பார்த்து விட்டு இது பச்சை மையால் போட்டிருக்கிறது வேறு கலரில் போட்டுத் தாருங்கள் என்றார்.
இது பச்சைக் கலர் இல்லை சார், டர்கிஷ் ப்ளூ ( TURQUOISE BLUE ) என்றேன் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.
மேனேஜரைக் கூப்பிட்டு அவரிடமும் சொன்னேன், சார் இது பச்சை இல்லை டர்கிஷ் ப்ளூ இதே கலரை வைத்துதான் பலமுறை செக்கில் கையெழுத்துப் போட்டு பணம் எடுத்திருக்கிறேன், என்னுடைய பாஸ்போர்ட்டில் உள்ள கையெழுத்தும் இந்த கலர்தான் சார் என்றேன், முடியாது என்றார்.
அதன்பின் என்னுடைய மாதிரிக் கையெழுத்து கார்டை ( SPECIMEN SIGNATURE CARD ) எடுத்துப்பாருங்கள் இதே கலர்தான் என்றேன் அதையும் அவர்கள்
ஒப்புக்கொள்ளவில்லை.
அன்றே அந்த செக்கை சென்ட்ரல் பேங்கில் கொடுத்து மாற்றிக்கேட்டேன் அவர்கள் IOB க்கு அனுப்பி அதே நாளில் மாற்றி பணத்தை தந்தார்கள்.
அடுத்தநாள் IOB அக்கவுண்டை குலோஸ் பண்ணுவதற்காக சென்ட்ரல் பேங்கில் IOB பாஸ் புக் , செக் புக் , லெட்டர் எல்லாவற்றையும் கொடுத்து
சென்ட்ரல் பேங்க் மூலமாக IOB அக்கவுண்டை குலோஸ் செய்தேன்.
இப்பொழுது 2009 ல் என்மனைவியுடன் ஜாய்ன்ட் அக்கௌன்ட் திறப்பதற்காக சென்றபோது பொறுமையை சோதித்தார்கள், இந்த செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கிற அத்தனை அனுபவங்களும் எனக்கு கிடைத்தது.
இருந்தாலும் புகார் செய்யாததற்குக் காரணம் எனக்கு விடுமுறை முடிந்து வெளிநாடு புறப்பட வேண்டிய நேரம் , அதை விட முக்கியக் காரணம்
மேனேஜர் ரிடையர் ஆகப்போற நேரத்தில் புகாரைக் கொடுத்து எதுக்கு அவருக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளை கெடுப்பானேன் என்ற எண்ணம்.
இப்பொழுதுதான் தெரிகிறது இவர்கள் இப்படி நடப்பது ஒருசிலரிடம், ஒரு சில நேரம்தான் என்றில்லாது பெரும்பாலோரிடம், பெரும்பாலான நேரமும் மரியாதைக் குறைவு, மெத்தனம், மற்றும் அதிகாரத் தோரணையுடன் நடக்கிறார்கள் என்று.
இவர்கள் காயல்பட்டணத்திற்கு வரும்போது ஏதோ பட்டிக்காடு ஐம்பது, நூறு வாடிக்கையாளர்கள் இருப்பர் என்று நினைத்து வருவர். வந்தபின்தான் தெரியுது ஆகா பெரிய , பெரிய டவுன்களில் உள்ள கிளையைவிட அதிகமான வாடிக்கையாளர்களும் , கொடுக்கல் , வாங்கலும் இருக்கிறதே என்று.
இதை விட்டு வெளியே டவுனுக்கு மாற்றலாகிப்போனால், சலுகை குறையும். அதனால் இங்கயே இருந்துக்கொண்டு நம்மிடம் கடுகடுக்கிறார்கள்.
-------------------------------------------------
பொதுவாக வங்கியாகட்டும் அல்லது எந்த ஒரு பொது இடமாகட்டும் அங்கே பொறுப்பில் உள்ளவர்கள்தான் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
வெளியிலிருந்து வரக்கூடிய நூற்றுகணக்கான வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் இருப்பர்.
கோபமாகவோ, நோயாளியாகவோ, அவசரகாரியமாகவோ, நல்ல குணமுடனோ ஏதோ ஒரு விதமாக வருவர். ஆனால் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்கள்தான் அவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
IOB என்றில்லை எந்த வங்கியானாலும் சரி, அல்லது வேறு எந்த அலுவலகமானாலும் சரி அனுசரித்து சென்றார்களேயானால் அது அவர்களுக்கும் , பொது மக்களுக்கும் நல்லது.
என்று அனுசரிப்புக் குறையுதோ அன்று இந்த மாதிரி புகார்கள் கொடுக்கப்பட்டு அங்கங்கே உள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும் என்பதை எல்லோரும்
உணர்ந்து செயலாற்ற வேண்டும்.
எங்களை மாதிரி உறங்காமல் விழிப்புணர்வு பெற்று மக்களையும் விழிப்புணர்வு பெறச்செய்த சகோதரர்களுக்கு நன்றி. மேலும் நல் தொண்டுகள் ஆற்றிட வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross