Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:45:35 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5681
#KOTW5681
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 18, 2011
மதிய உணவு இடைவேளை என விருப்பப்படி ஓய்வெடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள்! வாடிக்கையாளர் முறையீட்டைத் தொடர்ந்து சேவையைத் தொடர்ந்தனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7913 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (32) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பெரிய தெருவில் செயல்பட்டு வருகிறது ஐ.ஓ.பி. என்று சுருக்கியழைக்கப்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி. காயல்பட்டினத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.



தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையிலும், சனிக்கிழமை மட்டும் காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையிலும் வேலை நேரம் என்றும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றும் வங்கி வளாகத்திலுள்ள பலகை தெரிவிக்கிறது.



இது இப்படியிருக்க,

வேலை நேரங்கள் முறையாக பேணப்படுவதில்லை...

மதிய உணவு இடைவேளை என்று தம் விருப்பத்திற்கேற்ப ஓய்வெடுத்துக் கொள்கின்றனர்...

அவசியமற்ற காரணங்களைக் கூறி வங்கி மேலாளர் வேண்டுமென்றே அலைக்கழிக்கிறார்...

மணிக்கணக்கில் காத்திருந்தாலும் அசட்டையாகவே அலுவலர்கள் பணி செய்கின்றனர்...

காத்திருப்பு குறித்து முறையிட்டாலும் வேண்டுமென்றே கண்டுகொள்வதில்லை...

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தும், பெண்களை ஆண்கள் பகுதிக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தல்...




இவை காயல்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்கள் மீது வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.

இந்நிலையில், இன்று மதியம் 02.30 மணிக்கு இவ்வங்கிக்கு ஏ.கே.இம்ரான் என்ற வாடிக்கையாளர் பணம் அனுப்புவதற்காக சென்றிருக்கிறார். பணம் செலுத்தும் பகுதி அடைக்கப்பட்டிருந்தது கண்டு அங்கிருந்த அலுவலரிடம் அவர் வினவியபோது, இது மதிய உணவு இடைவேளை நேரம்... 03.00 மணிக்குத்தான் திறக்கப்படும் என்று தெரிவித்ததாகத் தெரிகிறது.





ஏற்கனவே, வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ளும் முறை சம்பந்தமாக இவ்வங்கியின் மேலாளர் உள்ளிட்ட அலுவலர்களின் நடவடிக்கைகள் குறித்து பல குற்றச்சாட்டுகள் உள்ளதைக் கருத்தில் கொண்டு நமக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிக்கு உடனடியாக விரைந்தோம்.

இதனிடையே, வேலைநேரம் அறிவிக்கப்பட்ட பலகையைப் பார்வையிட்ட அந்த வாடிக்கையாளர், “மதிய உணவு இடைவேளை என்று எந்த அறிவிப்பும் இல்லையே...?” எனக் கேட்டதற்கு, “நாளைக்கு எழுதுவோம்...” என்று அங்கிருந்த அலுவலர் அசட்டையாக விடையளித்தனர்.

இதுகுறித்து முறையிடுவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவதற்காக அங்கு நிறுவப்பட்டிருந்த பல்வேறு அறிவிப்புப் பலகைகளைப் பார்வையிட்டபோது, குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளடங்கிய அறிவிப்புப் பலகையை மறைத்து வங்கியின் வட்டிக்கடன் குறித்த அறிவிப்படங்கிய பதாகை தொங்க விடப்பட்டிருந்தது. அதனை ஒதுக்கிவிட்டு நாம் படமெடுக்க முனைந்தபோது, “அலாரத்தை அழுத்திவிடுவேன்... தலைமை அலுவலகத்திற்கு கம்ப்ளெய்ண்ட் வெச்சிறுவேன்...” என அங்கிருந்த அலுவலர்கள் மிரட்டுமுகமாகக் கூறினர்.





உடனடியாக, இவ்வங்கியின் மீதான குற்றச்சாட்டுகளைத் தெரிவிப்பதற்கான 1800 425 4445 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்புகொண்டு, வங்கியின் வேலை நேரம் குறித்து வினவியபோது, “மதியம் 01.30 மணி முதல் 02.00 மணி வரை மட்டுமே மதிய உணவுக்கான இடைவேளை...” என்று தெரிவிக்கப்பட்டது.

“தற்சமயம் மணி 02.35... இங்கிருக்கும் அலுவலர்கள் 03.00 மணிக்குத்தான் திறப்போம் என்று தெரிவிக்கின்றனர்...” என்று நாம் தெரிவிக்கவும், அலுவலரிடம் அதே தொலைபேசி அழைப்பில் பேசி விபரம் கேட்டனர். “இல்லே சார்... மதிய உணவு இடைவேளை நேரம் எழுதப்படலையே...ன்னு கேட்டாங்க... நாளைக்கு எழுதிடறோம்...ன்னு சொன்னோம் சார்...” என்றார்.

தொலைபேசியைக் கையில் பெற்றுக்கொண்ட நாம், “பிரச்சினை அதுவல்ல! இப்போது மணி 02.40... இன்னும் அவர்கள் திறக்கவேயில்லை...” என்று மீண்டும் தெரிவித்தோம். சென்னையிலுள்ள குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் அலுவலக எண்களான +91 44 28519568 அல்லது +91 44 28589718 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அங்கிருந்து தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு ஒருபுறம் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் அவசர அவசரமாக அனைத்துப் பிரிவுகளின் (கவுண்டர்) அடைப்புகளும் திறக்கப்பட்டன.







பின்னர் அங்கு வந்த வங்கி மேலாளர் செல்வராஜனிடம், நடந்த பிரச்சினைகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்கையில்,

மதிய உணவு இடைவேளை 02.00 மணி முதல் 02.30 மணி வரைதான் என்றும், நாளைக்கே அதுபற்றிய அறிவிப்பு வங்கியில் தொங்கவிடப்படும்...

நாங்களும் உங்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் இருக்கிறோம்... சில நேரங்களில் எனது வேலைப்பளு காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் வங்கியில் இருந்துவிட்டுதான் செல்கிறேன்...

ஒரே நேரத்தில் பலரைக் கவனிக்க இயலாது என்பதால் எனது அறைக்கு ஒரு நேரத்தில் ஒரு வாடிக்கையாளரை மட்டுமே அனுமதிக்கிறேன்... என்றாலும், இந்த அறையில் ஆண்கள் பகுதிக்கு ஒரு வாசலும், பெண்கள் பகுதிக்கு ஒரு வாசலும் உள்ளதால் நான் ஆண் வாடிக்கையாளருக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு பெண் வாடிக்கையாளரும், பெண் வாடிக்கையாளர் இருக்கும்போதே ஆண் வாடிக்கையாளரும் அவரவர் பகுதி வாசல்கள் வழியாக நுழைந்துவிடுகின்றனர்... என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. நான் சட்டம் பேசினால் அவர்கள் கூடுதலாக உரிமை எடுக்கின்றனர்... விபரமறிந்த ஒரு சிலர் மட்டுமே ஒத்துழைக்கின்றனர்...

ஒரே நேரத்தில் பலரை சமாளிப்பது உங்களுக்கும் திருப்தியளிக்காது... எனக்கும் முடியாததுதானே...? பெண் வாடிக்கையாளர்கள் யாரையுமே நாங்கள் ஆண்கள் பகுதிக்கு வரச் சொல்லவில்லை...
என்றார். பின்னர் கருத்து தெரிவித்த நாம், வேலை நேரம் அறிவிக்கப்பட்ட பலகையிலேயே மதிய உணவுக்கான இடைவேளை நேரத்தையும் தெளிவாக அறிவிக்குமாறும், வங்கி அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கான முறைமைகள் அடங்கிய அறிவிப்புப் பலகையை மறைக்கும் விதமாக எதையும் தொங்க விட வேண்டாமென்றும், மேலாளரைச் சந்திப்பதற்கான முறைமைகள் குறித்தும் இருபக்கமும் அறிவிப்பு தொங்க விடுமாறு கேட்டுக்கொள்ள, அவற்றை ஏற்றுக்கொண்ட அவர், உடனடியாக ஆவன செய்வதாகத் தெரிவித்தார்.

அதனையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Close all the accounts
posted by Mohamed Noohu (Chennai) [18 February 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 2700

The only reason I am close all type of account in this bank. Service is very poor. Same kind of thinks happened in Central Bank also.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Welldone
posted by Moosa Naina (Madina-K.S.A) [18 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2701

Congradulation. You done very good job. Please keep the eyes on the manager's attitude of Central Bank of India also. Thank you.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. v good.
posted by M.S.ABDULAZEEZ ( mogudoom st) (Guangzhou) [18 February 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 2702

VEARY GOOD..... i am veary appraeciated this quick disetion.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Manager Kayal IOB
posted by Ibrahim (Chennai) [18 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2703

As far as I know our Kayal IOB is like tortoise only. Because of their Lazy work. Even I mailed many time for a request with our bank. It was get done after four weeks. But I got reply mail from our IOB manger at 20:00 IST too.

This doesn't mean they are working so hard. It simply says that they are wandering out when business hours. I hope the manager will get lesson after this as well the employess there. I request people get the work done through mail. our kayal IOB mail id is kayalpbr@tutsco.iobnet.co.in and do not forget to put CC to eseeadm@iobnet.co.in

Hence the higher official from here in Chennai can command our Kayal Chinna Manager. If the things does not get done within the said business days. Simply esclate the things to eseeadm@iobnet.co.in

Avanga vellaiyum parkarathu illa. Namma velaiyum seekirama parka vidrathu illa.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. APPRECIATED FOR IMMEDIATE ACTION
posted by SEYED MUSTAFA (DOHA - QATAR) [18 February 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 2704

Thank you and appreciated for the action taken place in IOB Immediate action is the only solution to resolve the problems. I would like to suggest to form a seperate team or our welfare associations in kayal to oversee such type of problems as it is not only banks but also in government or public offices like cooperative stores, post office EB, Hospital Etc.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Noohu kaka decission is good
posted by Sayna (Bangkok) [18 February 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 2705

Dear kayalties,
If anybody have iob accounts, Just close this bank account in one day 50 to 100 accounts , then the head office investigate abt the bank, why the peoples close the accounts in oneday, then the manager get good lesson. any nice and take immediate action,

Ipadi iruntha kayalpatanam so so supera varum,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. When is that tomorrow?
posted by Husain Noorudeen (Abu Dhabi) [18 February 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2706

This is not the first time they are saying that they will inform about the lunch hours. When I was there at native before a year, I had some transaction initiated before lunch time and was asked to come after their lunch hour to complete my transaction (I do not remember the specific hours).

When I went there at their specified time, they did not respond to me. When I asked one of the officers there, he said lunch time is not yet finished. When I mentioned that the other office said that your lunch time is till such and such time, he negated.

Then I also asked them about the lunch time not being mentioned in the working hours board. They said they'll do it. It is more than a year now, and still they would do it tomorrow. Let us see when that tomorrow comes.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. take action IOB manager
posted by ABU HURAIRA (SAUDHI ARABIA) [19 February 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2708

அஸ்ஸலாமு அலைக்கும்

இதை தான் நான் எதிர் பார்த்து கொண்டு இருந்தேன். நம் வீட்டு பெண்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகு போக சொன்னாலே எரிச்சல் படுகின்றனர்.

நானும் ஊரில் இருக்கும் போது கண்கூடாக பார்த்தேன் அங்குள்ள staff மற்றும் மேனேஜர் நமது மக்களை சப்தம் போடுவதை!

பணம் போடவோ அல்லது எடுக்கவோ போனால் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகின்றன. இதை பத்தி நான் எனது பக்கத்தில் உள்ள சங்கத்தில் கடந்த ஆண்டு புகார் செய்தேன். அங்குள்ள மேனேஜர் மீது ஏற்கனவே புகார் இருப்பதாக அவர்கள் கூறினார்கள். இது ஒரு நல்ல சந்தர்பம். உடனே நமது ஐக்கிய பேரவை தக்க நடவடிக்கைகல் உரியவர்கள் மீது எடுக்க வேண்டும்.

இதுபோல பிரச்சனை மற்ற வங்கிகளில் எனக்கு தெரிந்து இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சங்கே...முழங்கு....!!!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்(அபு ரிஃபாத்) (புனித மக்கா.) [19 February 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2709

நமதூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முகத்திரையைக் கிழித்து அவர்களின் அலட்சியப்போக்கை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு ஆயிரமாயிரம் நன்றி!!!

கடந்த முறை நான் ஊர் வந்திருந்த போது ஓர் அவசியத் தேவைக்காக நான் என் மனைவியுடன் சேர்ந்து (ஜாய்ண்ட் அக்கவுண்ட்)எடுப்பதற்காக முறையான ஆவணங்களோடு கஜினி முகம்மது படையெடுத்த கதையாய் அலையாய் அலைஞ்சது தான் மிச்சம், கேட்கும் போதெல்லாம் நாளைக்கு வாங்க, திங்கள் வாங்க, புதன் வாங்க, இப்படியே பத்து முறை என்னை அலைக்கழித்தார் வங்கி மேலாளர்.

மறுநாள் என் பயணம் வேறு, போய் வாங்கு வாங்குன்னு வாங்கினேன். ஸ்டாஃப் இல்லை, ஒர்க் லோடுன்னு பல காரணங்கள் சொன்னார். சொன்னதைக் கைப்பட எழுதிக்கொடுங்க அப்பதான் நான் இங்கிருந்து போவேன் என்றேன். ஒரு வழியா அவரே வந்து, இரண்டு மாதங்களுக்கு முன் புதிதாய் சேர்த்த என் மனைவியின் ஆவணங்களை சரி பார்த்து என் கணக்கை அதனோடு இணைத்தார்.

இதுலெ வேடிக்கை என்னன்னா? அங்குள்ள உதவியாளர் தேடியும், கிடைக்காமல் நானே உள்ளே சென்று அப்ளிகேஷனை தேடி எடுத்துக் கொடுத்தேன். அப்போதும் கூட கம்ப்யூட்டரில் பதிவு செய்ய மூன்று நாட்களாகும் என்றார். என் விதியை நொந்து கொண்டே வீடு திரும்பினேன்.

மேலாளரின் கடுகடுத்த முகம், பெண்கள் கொடுக்கும் விண்ணப்பங்களை விருட்டென பிடுங்குவது, கால் கடுக்க பலர் அவர் முன் நின்றும் கண்டு கொள்ளாதது போல் இருப்பது, இப்படி சில நிகழ்வுகளை நான் அங்கு சென்றிருந்த போது பல முறை கண்ணுற்றேன்.

“நியாய விலைக் கடைக்கு ஓர் நியாயம் கிடைத்தது போல்”, இந்த வங்கிக்குச் சங்கு ஊத யாராவது முன் வருவார்களா? வாருங்கள்...ப்ளீஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Action to be drawn to HO
posted by S.T. Labeeb (Kayalpatnam(Kuthukkal St)) [19 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2710

They work for few customers. Since it is a nationalised bank they think nobody question them. Instead of closing the account we send a petition and insist the head office our view if proper action is not taken we will close the account in bulk.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. IOB Complaint Filed
posted by Thowfeeq (USA) [19 February 2011]
IP: 96.*.*.* United States | Comment Reference Number: 2711

I have filed a complaint with the top level management at IOB by emailing from their Chairman to the grievance cell. Following is the content. Hope they take some appropriate and positive action.

Email Subject :
================
About IOB Kayalpatnam Branch

Emails Sent To :
=================

Other public Grienvences Cell :
Dr. Shaik Abdul Khader : csd@iobnet.co.in
v Nodal Officer for Public Grievances at Central Office
Ms. Geeta P. Shetti : geetashetti@iobnet.co.in

Retail/Personal Banking
Dr. R. K. Mohanty : mdd@iobnet.co.in

Executive Director : akbansal@iobnet.co.in
Executive Director : nupurmitra@iobnet.co.in
Chairman & MD : cmd@iobnet.co.in

Email Content
==========
People of Kayalpatnam ( pincode: 628 204 ) have been facing extreme problems with the IOB Branch at Kayalpatnam with the branch manager to low level staff. They are not at all Customer friendly and neglect the customer's concern.

The manager at the IOB Kayal does everything autocratically and doesn't heed to any of the concerns. This has been going on for years now. The following is the news which was published on our hometown website.

Even though the news is in Tamil, the photographs are self evident from real.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=5681

Please take action against the manager and the staffs. If the branch manager behaves and manages properly, that will be the role model for the staffs but the case here is not at all acceptable.

If this goes like this we are planning to close the accounts in mass and move our accounts to other banks. Please treat this as urgent and take appropriate action against the manager and bring some customer friendly manager to continue your business. Hope you listen to us.

Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. THANKS GO TO IMRAN
posted by KADER SHAMUNA (HONGKONG) [19 February 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 2712

THANKS GO TO IMRAN.. NICE TO SEE PHOTOS..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. service is very bad
posted by M.A.Hassan (sharjah) [19 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2713

Assalamu alaikkum

It is very good decision, Thanks to all.. This IOB bank service is very bad... first of all please take action to the manager.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. I.O.B. IS NOT RESPECT TO PEOPLES.
posted by AHAMED THAHIR from Delhi (DELHI) [19 February 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2714

DEAR VIEWERS,

THIS ACTION IS VERY GOOD THING ONE. I AM PROUD OF U. THIS IS NECESSARY TO OUR PEOPLE.

SEE BCOZ, LOTS OF TIME I WENT TO ABOVE BANK. BUT, THEY ARE NEVER RESPONSE TO CUSTOMERS. EVERYDAY, EVERY PEOPLE FIGHT WITH MANGER & ACCOUNTANT.

THIS IS ONE SIDE GOOD COMEDY & ANOTHER SIDE SAD ONE. I REMEMBER SHARE WITH ALL. ONE MANAGER IS THERE.(I FORGETTEN HIS NAME)HE ALWAYS USING ONLY ONE WORD. THAT WORD IS: 'U COME MONDAY OR DAY AFTER TOMMORROW, NOW SYSTEM IS FAILED OR SERVER BUSY'..

I AM REALLY TELLING, ABOVE WORD ONLY HE KNOWN. OTHERWISE HE DIDN'T NECCESARY ACTION. SO, TOTALLY I WANT TO TELL SIMPLY, ALL I.O.B. CUSTOMERS ARE REALLY UN SATISFACTIONFOR THEY SERVICE.

WE WILL COMPLAINT TO CONSUMER COURT OR ANY NECESARY ACTION. THANKING U..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. TEACH LESSON TO IOB MANAGER.
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.) [19 February 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2717

DEAR BROTHERS,

YOU KNOW THE STAFFS OF IOB-KAYALPATNAM ARE BAD GUYS.... THEY DOES NOT HAVE MANNERS... DONT KNOW HOW TO DEAL CUSTOMER AND LADIES... THE SAME THING HAPPENED TO ME.... LIKE BROTHER MOHAMMED RAFEEK...

ANY TIME, THE MANAGER LOOK LIKE HORROR FACE... I THINK THEY WERE NOT PROPER LITERATE GUYS... ANOTHER MAIN THING IS THEY DOESNT KNOW HOW TO WRITE SPELL OUR NAME IN THE PASSBOOK.... SO MANY MISTAKEN...

ALWAYS DELAY THE WORK.... I THINK OUR PEOPLE DONT SUPPORT THIS BANK.... THEN ONLY COME TO KNOW OUR PEOPLE.... ALL OUR BROTHERS SEND COMPLAIN MAIL TO THE REGIONAL MANAGER OR HEAD OFFICE IN CHENNAI...

Moderator: Message edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. THANK MR.THOWFEEQ....
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.) [19 February 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2719

THANKYOU MR.THOWFEEQ, FOR UR GOOD JOB..... EVERYONE SEND COMPLAIN MAIL.... THATS BETTER.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Bad Experience
posted by Prabu Jailani (Jeddah) [19 February 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2720

I too had a very bad experience with IOB which was forced me to close the account with them and open an a new account with Tiruchendur IOB Branch where my classmate Mr. Linga Raj (from Ratnapuri) was working there. Now I am getting all supports and assistance even through on line.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Very Good Job for Mr. Thoufeeq
posted by M.A.C.AHAMED THAHIR from DELHI (DELHI) [19 February 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2721

THANKYOU MR.THOWFEEQ, FOR UR GOOD JOB..... EVERYONE SEND COMPLAIN MAIL.... THATS BETTER.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. பூனைக்கு மணி கட்டியாச்சா?
posted by சாளை. S .I . ஜியாவுதீன் (அல்கோபார் ) [19 February 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2722

பூனைக்கு மணி கட்டியாச்சா? அறுந்து விடாமல் அடிக்கடி பார்த்துகோங்க..

நம் பணத்தை நாம் போட்டு திரும்பவும் எடுக்கும் போது அவர்களிடம் கையை கட்டி, லைனின் நின்று எடுக்கும் கொடுமை..அப்பப்பா..

இந்த IOB உடன் என்னுடைய அனுபவத்தை எழுதினால் பல பக்கங்கள் பதிவு எழுத வேண்டும். அவ்வளவு அனுபவம்.

என் தாயாரை இந்த வங்கிக்கு அனுப்பினால் மிகவும் கவலையுடனும் ஒரு சடவுடன்தான் செல்லுகிறார்கள், அந்த அளவு இவர்களின் சேவை உள்ளது. என் தாயாரிடம் கேட்டால் " என்னப்பா இந்த வாங்கி.. போட்ட டிராப்ட் என்ன ஆச்சு என்று கேட்டால், அவர்களின் ஒரே பதில் " வரும், வரும் " அதுவும் முகத்தையே பார்க்காமல்.

Completely computerised Bank including staffs , இந்த வங்கியில் ஏதாவது ஒரு சிரித்த முகம் பார்த்தது உண்டா?. கம்ப்யூட்டர் சிரித்ததை நான் பார்க்கவில்லை. கொஞ்சமாவது மாறுங்கப்பா..!!

( நறுக்கு என்று கமெண்ட்ஸ் எழுத கை அறிக்கின்றது.. பார்போம்.. பார்ப்போம்..)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Gossip
posted by Ibrahim (Chennai) [19 February 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 2724

It is not fair to gossip here. Even you do things get done through mail. Better send mail to Kayal IOB manger along with CC to eseeadm@iobnet.co.in

But Manger won't reply in same business day. If you get 24 hrs passed simply esclate to CC address

The below are the some details I received from the Manager (Systems Analysis), Chennai to get the work done by favor of our Kayal IOB Manager.

Kasi viswanathan N
Manager (Systems Analysis)
Internet Banking Division,
ITD,Central Office.
Chennai.

Sureshraj.D
Manager (Systems Analysis)
Internet Banking Division,
ITD,Central Office.
Chennai.

S.Krishnan
Manager (Systems Analysis)
Internet Banking Division,
ITD,Central Office.
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. விழிப்புணர்வு வேண்டும்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [19 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2727

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த வங்கியின் நம் ஊர் கிளையை பொறுத்தவரை எந்த காலத்திலுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. பஜாரில் ஆராம்பள்ளித் தெருவுக்கு எதிர்புறம் IOB கிளை இயங்கிக் கொண்டிருந்தபோது 80 தின் ஆரம்பத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்தது இருந்தாலும் இப்போது உள்ள அளவுக்கு மோசமாக இருந்ததில்லை.

எனக்கும் ஒரு சம்பவம் 1980 தின் ஆரம்பத்தில் நடந்தது :

என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஒரு செக் கையெழுத்திட்டு வழமையாக கொடுப்பது போல் கொடுத்தேன், கவுண்டரில் உள்ளவர் கையெழுத்தை பார்த்து விட்டு இது பச்சை மையால் போட்டிருக்கிறது வேறு கலரில் போட்டுத் தாருங்கள் என்றார். இது பச்சைக் கலர் இல்லை சார், டர்கிஷ் ப்ளூ ( TURQUOISE BLUE ) என்றேன் அவர் ஒத்துக்கொள்ளவில்லை.

மேனேஜரைக் கூப்பிட்டு அவரிடமும் சொன்னேன், சார் இது பச்சை இல்லை டர்கிஷ் ப்ளூ இதே கலரை வைத்துதான் பலமுறை செக்கில் கையெழுத்துப் போட்டு பணம் எடுத்திருக்கிறேன், என்னுடைய பாஸ்போர்ட்டில் உள்ள கையெழுத்தும் இந்த கலர்தான் சார் என்றேன், முடியாது என்றார்.

அதன்பின் என்னுடைய மாதிரிக் கையெழுத்து கார்டை ( SPECIMEN SIGNATURE CARD ) எடுத்துப்பாருங்கள் இதே கலர்தான் என்றேன் அதையும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

அன்றே அந்த செக்கை சென்ட்ரல் பேங்கில் கொடுத்து மாற்றிக்கேட்டேன் அவர்கள் IOB க்கு அனுப்பி அதே நாளில் மாற்றி பணத்தை தந்தார்கள். அடுத்தநாள் IOB அக்கவுண்டை குலோஸ் பண்ணுவதற்காக சென்ட்ரல் பேங்கில் IOB பாஸ் புக் , செக் புக் , லெட்டர் எல்லாவற்றையும் கொடுத்து சென்ட்ரல் பேங்க் மூலமாக IOB அக்கவுண்டை குலோஸ் செய்தேன்.

--------------------------------------------------

இப்பொழுது 2009 ல் என்மனைவியுடன் ஜாய்ன்ட் அக்கௌன்ட் திறப்பதற்காக சென்றபோது பொறுமையை சோதித்தார்கள், இந்த செய்தியில் கொடுக்கப்பட்டிருக்கிற அத்தனை அனுபவங்களும் எனக்கு கிடைத்தது.

இருந்தாலும் புகார் செய்யாததற்குக் காரணம் எனக்கு விடுமுறை முடிந்து வெளிநாடு புறப்பட வேண்டிய நேரம் , அதை விட முக்கியக் காரணம் மேனேஜர் ரிடையர் ஆகப்போற நேரத்தில் புகாரைக் கொடுத்து எதுக்கு அவருக்கு கிடைக்கக்கூடிய சலுகைகளை கெடுப்பானேன் என்ற எண்ணம்.

--------------------------------------------------

இப்பொழுதுதான் தெரிகிறது இவர்கள் இப்படி நடப்பது ஒருசிலரிடம், ஒரு சில நேரம்தான் என்றில்லாது பெரும்பாலோரிடம், பெரும்பாலான நேரமும் மரியாதைக் குறைவு, மெத்தனம், மற்றும் அதிகாரத் தோரணையுடன் நடக்கிறார்கள் என்று.

--------------------------------------------------

இவர்கள் காயல்பட்டணத்திற்கு வரும்போது ஏதோ பட்டிக்காடு ஐம்பது, நூறு வாடிக்கையாளர்கள் இருப்பர் என்று நினைத்து வருவர். வந்தபின்தான் தெரியுது ஆகா பெரிய , பெரிய டவுன்களில் உள்ள கிளையைவிட அதிகமான வாடிக்கையாளர்களும் , கொடுக்கல் , வாங்கலும் இருக்கிறதே என்று.

இதை விட்டு வெளியே டவுனுக்கு மாற்றலாகிப்போனால், சலுகை குறையும். அதனால் இங்கயே இருந்துக்கொண்டு நம்மிடம் கடுகடுக்கிறார்கள்.

-------------------------------------------------

பொதுவாக வங்கியாகட்டும் அல்லது எந்த ஒரு பொது இடமாகட்டும் அங்கே பொறுப்பில் உள்ளவர்கள்தான் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.

வெளியிலிருந்து வரக்கூடிய நூற்றுகணக்கான வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் இருப்பர்.

கோபமாகவோ, நோயாளியாகவோ, அவசரகாரியமாகவோ, நல்ல குணமுடனோ ஏதோ ஒரு விதமாக வருவர். ஆனால் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்கள்தான் அவர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.

--------------------------------------------------

IOB என்றில்லை எந்த வங்கியானாலும் சரி, அல்லது வேறு எந்த அலுவலகமானாலும் சரி அனுசரித்து சென்றார்களேயானால் அது அவர்களுக்கும் , பொது மக்களுக்கும் நல்லது.

என்று அனுசரிப்புக் குறையுதோ அன்று இந்த மாதிரி புகார்கள் கொடுக்கப்பட்டு அங்கங்கே உள்ள குறைகள் நீக்கப்பட வேண்டும் என்பதை எல்லோரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

எங்களை மாதிரி உறங்காமல் விழிப்புணர்வு பெற்று மக்களையும் விழிப்புணர்வு பெறச்செய்த சகோதரர்களுக்கு நன்றி. மேலும் நல் தொண்டுகள் ஆற்றிட வாழ்த்துக்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. IOB Complaint First Reply
posted by Thowfeeq (USA) [19 February 2011]
IP: 96.*.*.* United States | Comment Reference Number: 2728

Just got a reply from the Chief Manager from IOB Central Office. It has been forwarded to the Regional Officer as well. I am still waiting for the replies or actions from the other people/top managements. We will see what they can reply. If not I am planning to give each one of them a call from here to explain further. The manager has to be shown the exit door and GO.
-------------------------------------------
Dear Sir/Madam

We acknowledge receipt of your mail dated 19.2.2011 and forwarded the same to the concerned Branch/RO/for early redressal.

We regret for the inconvenience caused.

Chief Manager/Customer Service Dept/Central Office
---------------------------------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Grievance cell
posted by Prabu Jailani (Jeddah) [19 February 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2729

Dear Thowfeeq,

Thanks for your effort in this regard. Hope your complaint to Grievance cell will yield more effective results. They will not reply to us instead they will fire them and will take appropriate action from Delhi. Therefore everyone must send complaint to the government grievance cell from the site http://pgportal.gov.in/


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. SAME ACTION NEEDED AGAINST VELAVAN GAS AGENCY(TIRUCHENDUR)
posted by ABU ZAINAB (Kayalpatnam) [20 February 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 2732

Dear SK kaka & Other Brothers

Please do the same action against the Velavan Gas Agency (Tiruchendur)

They always keep the Phone line Busy or Un attend, to avoid call from Kayal customers (local customers booking directly)

Even Wawoo groups open in our town,Still it will help many Kayal House wifes


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Close Monitoring
posted by K.V. Mohudoom (Dubai - UAE) [20 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2734

Dear Administrator, My suggestion to solve this issue is to write a strong letter highlighting the current incident to the H.O. of IOB and insisting to install CCTV that will be directly monitored by the H.O., so that the staff in Kayalpatnam IOB Branch will sincerely work.

If this is also not working properly, then we shall go for mass withdrawal of closing the Accounts with that particular branch.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. CCTV
posted by Ibrahim (Chennai) [20 February 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2736

Still no CCTV in this branch? Proud to say one of the Nationalized Bank. :P


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. EB, GAS AGENCY
posted by Ibrahim (Chennai) [20 February 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 2737

Expecting same action will done on EB and Gas Ajency service man who are bribe to our Kayal homemakers to deliver the LPG and Service the Electricity related problems


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Good work Brother Thowfeeq
posted by MU.Shaik Abdul Kader (Abudhabi) [20 February 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2739

dear Brother Thowfeeq,

thanks for your good work. Cheers, Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. well done
posted by syedahamed (Guangzhou) [20 February 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 2742

this action is very good and it should be follow in all the govt.companies.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Honor your action
posted by Riyath (Hong Kong) [20 February 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 2745

I have had a terrible experience with IOB to dealt with staff to persue central government benefits for education. I would escalate said issue on 1999 if this channel available on that time and glad to have this channel at least now to share social experiences and solving problems.

Salute for photo capture and right action at right time.

CCTV concept is welcomed and Its not too late.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Corrective Measures Initiated
posted by Thameem Ansari (Libya) [22 February 2011]
IP: 41.*.*.* Libyan Arab Jamahiriya | Comment Reference Number: 2778

With reference to the complaint lodged I am given to understand that corrective measures have been initiated. Please continue your patronage. The following is the text of the mail as I have received from CSD. IOB.

by
SAT Ansari

Dear Sir

We're extremely sorry for the sentiments/feelings expressed in your below mail and share your concern. We have already advised our Regional Office, Tuticorin to take necessary corrective steps to improve the situation.

We shall once again ask them to expedite the process on the issue. Pls bear with us for a while, and in the meantime we request you to continue your valuable clientele with our bank/branch. You will hear from our Br/RO shortly in this regard. We once again very sincerely regret for all the inconveniences caused to you in this connection.

CSD/IOB.C.O.,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Need Mail ID
posted by HAFIL AMEER (DUBAI) [28 February 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2921

Dear Admin,

I need a mail id of IOB Manager, kayalpatnam branch to assist one work with the bank. If you can, please sned the mail id to me.

thanking You.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் பருவநிலை மாற்றம்!  (19/2/2011) [Views - 2645; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved