உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில், பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கான தேர்வு வழிகாட்டு நிகழ்ச்சிகள் பாடவாரியாக ஆண்டுதோறும் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசை மூலம் ஒளிபரப்பப்படுவது வழமை.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வு விரைவில் துவங்கவுள்ளதையடுத்து, இக்ராஃவின் 12ஆம் வகுப்புக்கான பாடவாரியான கல்வி ஒளிபரப்பு காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான (ஐ.ஐ.எம். டி.வி.)யில் நேற்று முதல் பின்வருமாறு ஒளிபரப்பப்பட்டு வருகிறது:-
காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியரும், இக்ராஃ கல்வி ஒளிபரப்பின் ஒருங்கிணைப்பாளருமான எம்.ஏ.புகாரீ இக்கால அட்டவணையை நெறிப்படுத்தியுள்ளார்.
தகவல்:
ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம். |