வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்காக, பிப்ரவரி 19, 20 ஆகிய இரு நாட்களில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இச்சிறப்பு முகாம்கள், ஊரகப் பகுதிகளில் பிர்கா நிலையிலும், நகரப் பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும்
நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் நடைபெறும். படிவங்களைப் பெறுவதற்காக ஊரகப் பகுதிகளில் வருவாடீநு ஆய்வாளர் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர் ஆவார். நகரப்பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள மேலாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்கள் ஆவார்கள்.
2. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் / இடம் மாற்றுதல் ஆகியவற்றுக்கு முறையே படிவம் 6 / 7 / 8 / 8ஏ –இல் அளிக்கப்படும் விண்ணப்பங்களும் மேற்கூறிய சிறப்பு முகாம்களில் பெறப்படும். இவ்விண்ணப்பங்களை இரு பிரதிகளாக அளிக்க வேண்டும். பொது மக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
தலைமைத் தேர்தல் அதிகாரி,
தமிழ்நாடு.
|