தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 23.02.2011 அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மன்ற நிர்வாகம் சார்பில் அதன் செயலர் ஹாஃபிழ் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
இன்ஷாஅல்லாஹ் வரும் 23/02/2011 புதன் கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப் பிறகு நமது தாய்லாந்து காயல்பட்டணம் வெல்பேர் அசோசிசன் பொதுக்குழு கூட்டம் பாங்காக் ஜெம் ஹவுஸ் இல்லத்தில் தலைவர் ஹாஜி வாவு சம்சுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கிறது.
அது சமயம் நமது தக்வா உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் உரிய நேரத்தில் கலந்து தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
மேலும் இச்செய்தியை படிப்பவர்கள் மற்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
குறிப்பு:
உறுப்பினர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உறுப்பினர்கள் மறக்காமல் தங்களுடைய உறுப்பினர் மாத சந்தாவையும் கொண்டுவந்து நமது ஊர் மக்களின் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு தடையின்றி உதவிட தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்கிடுமாறு வேண்டுகிறோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross