திருக்குர்ஆனை முறையான உச்சரிப்புடன் அழகிய முறையில் ஓதும் ஆர்வத்தைத் தூண்டும் நோக்குடன் திருச்சி ஜமால் முஹம்மத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் ஓதல் - கிராஅத் போட்டி 16.02.2011 அன்று நடைபெற்றது.
இப்போட்டியில் காயல்பட்டினத்திலிருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சார்ந்த அஹ்மத் ரிஃபாய் என்பவரின் மகன் ஹாஃபிழ் அப்துல் காதர் வாஃபிக், காயல்பட்டினம் சித்தன்தெருவில் இயங்கி வரும் சித்தி ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா பயிற்சிக்கூடம் மூலம் இப்போட்டியில் கலந்துகொண்டு, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள மீலாத் விழாவின்போது, மாநில அளவில் முதலிடம் பெற்ற இம்மாணவருக்கு பரிசுத்தொகையாக ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படவுள்ளது.
காயல்பட்டினம் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஹாஃபிழான இவர், சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருகிறார்.
சில மாதங்களுக்கு முன், இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட கிராஅத் போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் இம்மாணவர் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
S.H.அப்துல் காதர்,
(பரிசு பெற்ற மாணவரின் பெரிய தந்தை)
ஜித்தா, சஊதி அரபிய்யா.
News edited! |