காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவிலுள்ள குத்பிய்யா மன்ஸிலில் ஆண்டுதோறும் மீலாத் விழா நடத்தப்பட்டு, மார்க்கத்திற்கும், சமுதாயத்திற்கும் தத்தம் துறைகளில் குறிப்பிடத்தக்க சேவைகளாற்றி வருவோரைத் தேர்ந்தெடுத்து தங்க நாணயம் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும்.
அந்த அடிப்படையில் இவ்வாண்டின் மீலாத் விழா நிகழ்ச்சி 16.02.2011 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. அஷ்ஷெய்க் எம்.இசட்.ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மவ்லவீ ஃபக்கீர் முஹ்யித்தீன் அரூஸீ என்ற மார்க்க அறிஞருக்கு 8 கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் முன்னிலை வகித்த ஊண்டி ஆலிம் அப்பரிசை வழங்கினார்.
இதற்கு முன், மவ்லவீ மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மவ்லவீ தேங்கை ஷர்ஃபுத்தீன் மிஸ்பாஹீ, மறைந்த பாடகர் ஸாலிஹ், மறைந்த கவிஞர் எஸ்.எம்.பி.மஹ்மூத் ஹுஸைன், பாளையம் இப்றாஹீம், ஆசிரியர் இசட்.ஏ.ஷேக் அப்துல் காதிர், சுலைமானிய்யா பப்ளிஷர் நிறுவனத்தார் ஆகியோருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
குத்பிய்யா மன்ஸில் சார்பாக,
ஹாஜி J.M.அப்துர்ரஹீம் காதிரீ,
மகுதூம் தெரு, காயல்பட்டினம். |