காயல்பட்டினத்தில் வாக்காளர் பட்டியலிலுள்ள விபரங்களைத் திருத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த 19, 20 தேதிகளில் காயல்பட்டினம் சித்தன்தெருவிலுள்ள அரசு மகளிர் மேனிலைப்பள்ளி மேல்நிலைப் பிரிவு வளாகத்தில் முகாம் நடைபெற்றது.

நகர்மன்ற உறுப்பினர் எஸ்.ஐ.ரஃபீக், காக்கும் கரங்கள் அமைப்பினர் இம்முகாமில் வாக்காளர்கள் தமது விபரங்களைத் திருத்திப் பதிவு செய்துகொள்வதற்கான வழிகாட்டுப் பணிகளை மேற்கொண்டனர்.

முகாமில் ஏராளமான ஆண்-பெண் வாக்காளர்கள் கலந்துகொண்டு தமது பெயர், முகவரி, தந்தை அல்லது கணவர் பெயர், வயது, புகைப்படம் உள்ளிட்டவற்றிலுள்ள குறைகளை அடையாளங்காட்டி, அவற்றைத் திருத்துவதற்கு விண்ணப்பித்தனர். |