காயல்பட்டினம் நகராட்சியின் வடபுறத்தில் உள்ள கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் கட்டப்பட்டுவரும் 169 குடியிருப்புகளுக்கு CRZ ஒப்புதல் வழங்கப்படவில்லை என காயல்பட்டணம்.காம் - தகவல் அறியும் சட்டம் கீழ் வினவிய கேள்விக்கு - சுற்றுப்புறச்சூழல் துறை பதில் வழங்கியுள்ளது.
சுற்றுப்புறச்சூழல் துறையிடம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியகம் உட்பட இதர அரசு துறைகள் - இத்திட்டம் குறித்து - ஒப்புதல் கேட்டு ஏன் விண்ணப்பிக்கவில்லை என கேள்வி நம்முன் எழுகிறது. குடியிருப்பு கட்டுமானம் அரசு திட்டம் என்பதால் அதற்கு ஒப்புதல் தேவை இல்லாமல் இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதில் உண்மையென்ன?
அரசின் சார்பாக கட்டப்படும் சுனாமி குடியிருப்புகளும் CRZ ஒப்புதல் பெறவேண்டும் என்பதை - இது போன்ற திட்டங்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிறைவேற்றப்படும் போது கடைப்பிடிக்கப்பட்ட வழிமுறைகள் மூலம் அறியலாம்.
உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொளச்சல் கிராமத்தில் 40 வீடுகள் கட்ட CRZ அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் செய்த விண்ணப்பம் TAMIL NADU STATE COASTAL ZONE MANAGEMENT AUTHORITY உடைய 49வது கூட்டத்தில் ஜனவரி 12, 2009 அன்று பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு திட்டங்களுக்கு CRZ சட்டத்திலிருந்து விதிவிலக்கு கிடையாது என அறியலாம். பார்க்கவும் கீழே:-
இதுபோல் தூத்துக்குடி ஆட்சியகமும் கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதி குடியிருப்புகளுக்கு CRZ ஒப்புதல் பெற விண்ணப்பித்திருந்தால் அது வழங்கப்பட்டிருக்குமா? இக்கேள்விக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள கொளச்சல் விண்ணப்பமே பதில் அளிக்கிறது.
கொளச்சல் கிராமம் - காயல்பட்டணம் போல் - CRZ - 3 மண்டலத்தை சார்ந்தது. புது குடியிருப்புகள் குறித்த அதன் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட 40 பிளாட்களில், 18 பிளாட்கள் கடலில் இருந்து 200 மீட்டருக்கு உள்ளே அமைந்திருந்தது. ஆகவே அந்த குடியிருப்புகளுக்கு மட்டும் ஒப்புதல் வழங்காமல், 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை இருந்த மீதி 22 பிளாட்களுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதுகுறித்த ஆணை இதோ:-
The Authority resolved to clear the proposed constructions falling in between 200mts and 500mts from the HTL. Since any new construction between 0 mt and 200 mts in CRZ III is prohibited activity as the said area is earmarked as No Development Zone, the Authority has not cleared the proposed constructions falling in between 0 mt and 200 mts from HTL.
மேலே குறிப்பிடப்பட்ட ஆணையை உள்ளடக்கிய TAMIL NADU STATE COASTAL ZONE MANAGEMENT AUTHORITY உடைய 50வது கூட்ட தீர்மானங்கள் முழுமையாக கீழே:-
காயல்பட்டினம் நகராட்சி மற்றும் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தகவல்கள்படி தற்போதைய கட்டுமானங்கள் கடலில் இருந்து 75 மீட்டர் முதல் 150 மீட்டர் வகை பகுதியில் துவங்கி நடைபெறுகின்றன. CRZ 3 விதிகள்படி இது (75 மீட்டர் முதல் 150 மீட்டர்) கட்டுமானபணிகள் தடைசெய்யப்பட்ட No Development Zone (NDZ) பகுதியாகும்.
1. கல் விட்டு பார்க்க வேண்டியதுதானே? ஏன் இனியும் உறக்கம் posted byABOOHUMAIDH (CHENNAI)[20 February 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 2746
ஊரை கூட்டி அடிப்படை இல்லாத விசயங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்த ஐக்கிய பேரவை உருப்படியான CRZ விதி முறைகளை வைத்து களத்தில் இறங்க என்ன தயக்கம்? கல் விட்டு பார்க்க வேண்டியதுதானே? ஏன் இனியும் உறக்கம்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross