காயல்பட்டினம் நகராட்சியின் வடபுறத்தில் உள்ள கற்புடையார் வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் 169 குடியிருப்புகள் தற்போது கட்டப்பட்டுவருகின்றன. நகரில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இக்கட்டுமானபணிகளுக்கு CRZ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதா என காயல்பட்டணம்.காம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மாநில சுற்றுப்புறச்சூழல் துறையிடம் வினவியது.
அதற்கு பதில் அளித்த அத்துறையின் இணை இயக்குனர் ஆர்.ராகவேந்திரன் - தங்கள் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள்படி சிங்கித்துறை என்ற கிராம பெயரில் கட்டுமான பணிகள் குறித்து எவ்வித விண்ணப்பமும் பெறப்படவில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் இத்திட்டம் ETRP/RGRP திட்டங்களில் சேர்ந்த கட்டுமான பணி என்பதால் இது குறித்த மேலதிக தகவல் தூத்துக்குடி ஆட்சியகத்தில் இருந்து செயல்படும் ETRP/RGRP திட்ட அலுவலகத்தில் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Coastal Regulation Zone Act 1991 சட்டப்படி இந்தியாவின் கடலோர பகுதிகள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் காயல்பட்டணம் CRZ - 3 பிரிவை சார்ந்தது. இம்மண்டலத்துக்கான விதிகள்படி கடலிலிருந்து 200 மீட்டர் வரை கட்டுமானங்கள் தடை (No Development Zone) செய்யப்பட்டுள்ளன. கடலிலிருந்து 200 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை சில கட்டுப்பாடுகளுடன் கட்டுமானபணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
காயல்பட்டினம் நகராட்சி மற்றும் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தகவல்கள்படி தற்போதைய கட்டுமானங்கள் கடலில் இருந்து 75 மீட்டர் முதல் 150 மீட்டர் வகை பகுதியில் துவங்கி நடைபெறுகின்றன. CRZ 3 விதிகள்படி இது (75 மீட்டர் முதல் 150 மீட்டர்) கட்டுமானபணிகள் தடைசெய்யப்பட்ட No Development Zone (NDZ) பகுதியாகும்.
1. Housing Project posted byA.M. Syed Ahmed (Riyadh - KSA)[20 February 2011] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2740
IS THERE NO? ""SUBRAMANIYA SAAMI"" IN OUR TOWN TO STOP THIS PROJECT THROUGH THE RIGHT PETITION.
RIGHT WAY, GATHER THE PUBLIC ONCE AGAIN AND ROUND THE SITE WITHOUT VIOLENCE, ONCE LAW & ORDER IS BROKEN OUT, NO WAY TO THE DISTRICT COLLECTOR EXCEPT STOPPING THE PROJECT. DON'T ALLOW THE COLLECTOR TO GIVE THE FIRST NIGHT PROMISE, TAKE IT BY WRITTEN TO DEMOLIZE THE SITE.
IT SEEMS CLEAR PLAN IS CARRIED OUT AROUND US
AS TARGETED KILLING. UNITE TOGETHER DON'T FIGHT AGAIN FOR AQQEEDA, EX.UNTILL PROPHETS(SAW) DEATH THERE WAS A NON BELIVER (KAFIR), THINK & UNITE.
TRY IN THE WAY OF MAHATHMA GANDI OR IN THE WAY OF NSC BOSE.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross