காயல்பட்டினத்திலுள்ள பொதுநல அமைப்புகளான காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், காயல்பட்டினம் சமுதாயக் கல்லூரி, கே.வி.ஏ.டி.புகாரி ஹாஜி அறக்கட்டளை, அரிமா சங்கம் இணைந்து, இம்மாதம் 20.02.2011 (நாளை) காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறிதல், இரத்தப் பிரிவு கண்டறிதல் முகாம் நடத்தவுள்ளன.
டாக்டர் ஆர்.சரவணன், டாக்டர் ஸ்ரீராம் கணகவேல், மேரி தங்கம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் முகாமில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளவுள்ளனர்.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமையிலும், நகர பிரமுகர்கள் முன்னிலையிலும் நடைபெறவுள்ள கருத்தரங்கத்திலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் முகாமிலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அந்த அமைப்புகளின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. |