தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மையினர் கருத்து கேட்பு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில சிறுபான்மையின ஆணைய தலைவர் பாதர் வின்சென்ட் சின்னத்துரை கலந்துகொண்டு சிறுபான்மையோர் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் -
தமிழக அரசு சிறுபான்மை இன மக்கள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அளித்து வருகிறது. சிறுபான்மையினர் குழந்தைகள் கல்வி உதவித் தொகை கடந்த 2006ல் ரூ.1 கோடி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.40 கோடி வழங்கப்படுகிறது. சிறுபான்மையோர் பள்ளிகளுக்கு அரசு மானியத் தொகை வழங்கி வருகிறது.
தனி நபர் கடன் 34.7 லட்சம் வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கு ரூ.5 கோடிக்கு மேலாக கல்வித்தொகை உட்பட பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் மட்டுமல்லாமல் ஜாதியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் இந்த அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. உலமாக்களுக்கு நலத்திட்ட உதவிகளும், இட ஒதுக்கீடும் நிரப்பபட்டு வருகிறது.
பல்கலைகலைகழகங்களில் சிறுபான்மையின மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இதனை ஆனையம் அரசின் கவனததிற்கு கொண்டும் செல்லும்
என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சிறுபான்மை இன ஆணையர் பஷீர் அஹம்மது, உறுப்பினர் மெளரியா மோத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross