சமீபத்தில் மாநில அளவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் வைத்து நடைபெற்ற கிராஅத் போட்டியில் காயல்பட்டணம் சித்தி பாத்திமா ரழியல்லாஹு தஆலா
அன்ஹா பயிற்சி மையத்தின் சார்பாக பங்குபெற்று முதலிடம் பெற்ற அல்ஹாஃபிழ் A.R
அப்துல் காதர் வாஃபிக்கை பயிற்சி மையத்தின் இயக்குனரும் சென்ட்ரல்
மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியருமான S.H. MEERA SAHIB பாராட்டினார்.
5ம் வகுப்பு வரை படித்த பின் அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவில் ஹிஃப்ழு பிரிவில்
இணைந்து May 2009 ல் ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்ற அப்துல் காதர் வாஃபிக்
அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யாவின் School Education Teacher ஆகிய மீரா சாகிப்
அவர்களிடம் அம்மத்ரஸாவில் வைத்தே சிறப்பு பாடம் கற்பிக்கப்பட்டு தனியார் முறையில்
(Private Candidate) 8ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுதி முழு
வெற்றி பெற்று தற்போது 11ஆம் வகுபபு (Biology Group) சென்ட்ரல்
மேல்நிலைபபள்ளியில் பயின்று வருகிறார்.
தற்போதும் இதே போல் பல மாணவர்கள் இம்மத்ரஸாவில் ஹிஃப்ழு செய்து கொண்டே
பள்ளிப் படிப்பையும் தொடர்ந்து பயில்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவண்
S.H.MEERA SAHIB,
S’FTC- EAST SITTAN STREET.
KAYALPATNAM.
2. CONGRADULATIONS posted byAl Ihsaan (Dubai)[23 February 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 2792
ஹாபிள். அப்துல் காதர் வாபிகுக்கு வாழ்த்துக்கள். அவரை உருவாக்கிய அல்மத்ரஸத்துல் ஹாமிதிய்யா இவரைப் போன்று பல திறமை வாய்ந்த மாணவர்களை / ஹாபிள்களை உருவாக்கியிருக்கிறது. அப்படி உருவானவர்கள் தொடர்ந்து மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வியை கற்று இன்று ஆலிம்களாக, Doctor, Engineer மற்றும் Technical field ல் தேர்ச்சிப் பெற்று உலகின் பல இடங்களிலும் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அறியும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
இம்மத்ரசாவும் இது போன்று பணியாற்றும் மதரசாக்களும் நீடூழி நின்று செயலாற்ற ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
இது போன்ற மதரசாக்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய நம் மக்கள் முன் வர வேண்டும் என்று இதன் மூலம் வேண்டிக்கொள்கிறேன்.
3. ஆசிரியரின் அயராத உழைப்பிற்கு ஓர் நல்லதோர் எடுத்துக்காட்டு posted byமுஹம்மது ரஃபீக்,(அபு ரிஃபாத்) (புனித மக்கா.)[23 February 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2796
ஹிஃப்ழ் எனும் மணப்பாடத்திற்காக மாணவர்களின் மனதை ஆழமாக உழுது அதில்,கல்வி எனும் தரமான வித்தை, இளமை எனும் நன் நிலத்தில் விதைத்து,பயிற்சி எனும் தண்ணீரை ஊற்றி,ஆர்வம் எனும் உரமிட்டு அழகாக வளர்த்து வந்தால்,அறிவு எனும் மகசூல் அமோக விளைச்சலைத் தந்து,வெற்றி எனும் அறுவடைக்கு வழி வகுக்கும் என்பது இம் மாணவர்க்கு பயிற்சி அளித்த அந்த ஆசிரியரின் அயராத உழைப்பிற்கு ஓர் நல்லதோர் எடுத்துக்காட்டு!!!
“நன்னிலம் நோக்கி நல்வித்து விதைப்பின்
மண்ணிற்கு வருமாம் பயன்.” -புதுக்குறள்.
6. alhamdulillah posted bymahmood sulthan (chennai)[28 February 2011] IP: 124.*.*.* India | Comment Reference Number: 2923
salam. all praise to Allah subhanahuth'ala. then my wishes to AL MADRASATHUL HAMIDHIYYA ( principal, social servicers, hifl staffs,relegious education staffs,school education staff and student friends). my special wishes to alhafil abdul cader wafiq. may Allah ll give all health and wealth to all.wishin all to set more records like this inshaa Allah. wassalam
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross