ஐக்கிய அரபு அமீரகம் துபை நகரில், துபைவாழ் சுன்னத் வல் ஜமாஅத் வழி பேணும் காயலர் கூட்டம் 18.02.2011 வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
மவ்லவீ எஸ்.எச்.முர்ஷித் ஃபாஸீ நிகழ்ச்சிக்குத தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எஃப்.ஷெய்க் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வ்லவீ எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், இவ்வாண்டு மீலாத் விழா உரை நிகழ்த்தும் பொருட்டு அபூதபீ மவ்லித் கமிட்டியினரால் அமீரகம் வரவழைக்கப்பட்டுள்ள - காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
பின்னர், அபூதபீ மவ்லித் மஜ்லிஸில் அவர் நிகழ்த்திய உரைகளின் பதவுகளடங்கிய குறுந்தட்டு வெளியிடப்பட்டது. மவ்லவீ எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ வெளியிட, கீழக்கரை “முஹிப்புல் உலமா” மஃரூஃப் காக்கா அதனைப் பெற்றுக்கொண்டார்.
இறுதியில், ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா துஆ ஓத, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் அமீரகம் வாழ் காயல் சுன்னத்வல் ஜமாஅத் வழிபேணும் மக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகம் செய்யப்பட்டது.
தகவல்:
ஹாஃபிழ் A.A.C.ஹாஃபிழ் அமீர்,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |