செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
திசை திருப்பும் சீனிவாசனின் அறிக்கை,,,,,,, posted byNIZAR (KAYALPATNAM)[02 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27716
அடிப்படை ஆதாரமற்ற DCW துணைத்தலைவர் சீனிவாசனின் அறிக்கைக்கு அழகிய மருத்துவ ஆதாரங்களுடன் நடுநிலை
யுடன் டாக்டர் பெருந்தகையின் மறுப்பு அறிக்கை மிகவும் சிறப்பும் சிந்தனைக்குரியது என்றால் அது மிகையில்லை எனலாம்.அமில விஷ கழிவுகளை காற்றிலும்,கடலிலும் கலந்து நூற்றுகணக்கான சகோதரரின் உயிரை காவு வாங்கிவிட்டு காயல்பட்டினத்தின் வாழ்க்கைமுறைதான் கேன்சர் வர காரணம் என்ற சீனிவாசனின் உளறல் நகைப்புக்குரியது அல்லவா?
இவருடைய கருத்துக்கு பதில் சொல்ல சென்னை பட்டணம் வரை எல்லாம் போக தேவையில்லை,எந்த அசதியில் தூங்கினாலும் வாகனத்தில் உள்ளே நுழைந்தவுடன் கபாலத்தையே கிறக்க வைக்கும் சாக்கடை வரவேற்பை கொண்ட திருசெந்தூர் இவருக்கு தெரியாதா?
வீட்டுக்கு வருபவர்களை வரவேற்கும் வீட்டு வாசலில் சாக்கடை நீரோடை,குறுகிய ரோடுகள்,ஒரு குடியிருப்புகளில் எத்தனையோ குடும்பங்களின் நெருக்கமான வாழ்க்கை,
சுகாதார கேடான உணவு கடைகள்,அங்கங்கே சாக்கடை தடாகங்கள்,செந்தூர் கூவத்தின் அருகில் பள்ளிகூடங்கள்,
திருமண மண்டபங்கள்,ஊராட்சி மன்றங்கள் என சாக்கடை வளையத்துக்குள் இருக்கும் இந்த ஊரில் ஏன் இந்த கொடிய நோய் இல்லை?
அசைவம் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்றால் காயல்பட்டினத்தை விட்டால் வேறு எங்கும் அசைவம் சாப்பிடவில்லையா?சிறு பிள்ளைத்தனமான இவரின் அறிக்கை DCW வினால் நம் ஊரு மக்களுக்கு ஏற்படும் கொடிய பாதிப்பை திசை திருப்புவதாக உள்ளது எனலாம்.
ஆனால் நம் ஊரு மக்கள் இவ்வளவு மூர்க்கமாக இந்த ஆலையை எதிர்த்துவிட்டு இவர்கள் செலவில் நடத்தும் மாவட்ட கால்பந்து லீக் ஆட்டத்தில் அங்கே போய் விளையாடுவதும்,சீனிவாசன்போன்றவரோடு நம் பெரியவர்கள் உறவாடுவதும் முரண்பாடு இல்லையா?
லீக் ஆட்டம் அங்கே தான் விளையாட வேண்டும் என்ன தேவை இருக்கிறது.அதை வேறு மைதானங்களுக்கு மாற்றி கேட்கலாமே?வரும் காலங்களை ஆவது இது போன்ற விசயங்களில் கூட நாம் கவனம் செலுத்துவதுதான் நாம் அந்த ஆளை யின் மீது நாம் கொண்டுள்ள எதிர்ப்பில் அர்த்தம் இருக்கும்.அணைத்து செய்திகளும் உள்ளடக்கி அற்புதமான மறுப்பு அறிக்கை வழங்கிய நம் டாக்டர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெர்வித்து கொள்கிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross