மன உறுதியும், மாறாத கொள்கையும்... posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[05 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27778
நமதூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த இஸ்லாமிய மாத இதழ்களான நற்சிந்தனை, முத்துச்சுடர், அல்ஹிதாயா போன்ற பத்திரிக்கைகளில் பீடி,சிக்ரேட்.புகையிலை போன்ற விளம்பரங்களுக்கு இடமில்லை என உறுதியுடன் அதன் ஆசிரியபெருமக்கள் கடைபிடித்து வந்தனர்.
அதே போல் தாம் வரையும் எந்த ஒரு ஓவியத்திலும் உருவம் இருக்கக் கூடாது என இன்றளவும் மனதிலும் செயலிலும் மாறாத கொள்கையைக் கடைபிடித்து வரும் காயல் இப்னு அப்பாஸ் எனும் ALS மாமா அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மேல் குறிப்பிட்ட அனைத்து இதழ்களிலும் அவர் பயனுள்ள பல ஆக்கங்கள், கட்டுரைகளைத் தொடர்ந்து தந்துள்ளார்.
இந்த வயோதிகத்திலும் ஒரு வாலிப மிடுக்கோடு தமது கைவண்ணத்தில் பல வண்ணங்களைத் தீட்டி மழலைகளுக்கும் கற்று தருகின்றார்.
ஒரு முறை ஐந்து வயதுள்ள சிறுமி ஓவியப்பள்ளிக்கு பயிற்சிக்காக வந்த போது தலைத்துணி ஹிஜாப் போட மறந்து விட்டாள். சரி, சிறுமிதானே என விட்டு விடாமல் உடனே அவளை அவளது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஹிஜாபை வலியுறுத்தியதோடு பெற்றோருக்கும் நல்ல டோஸ் விட்டுவிட்டு வந்ததாக எனது தாயார் கூறக் கேட்டேன்.
அல்லாஹ் இப்பெரியவரின் ஆயுளை நீடித்து வைத்து இன்னும் பயனுள்ள பல நல்ல காரியங்களைச் செய்யும் வாய்ப்பை அவருக்கு நல்க வழி வகுப்பானாக...ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross