முன்மாதிரி! posted byMauroof (Dubai)[05 June 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27777
மனித சமூகம், இதர ஜீவராசிகள் மற்றும் இயற்கை நலன்களுக்கு பலவிதமான கேடுகளை ஏற்படுத்துவதில் மனித கைகளின் பங்கு அபரிமிதமானது. அவ்வாறான கேடுகள் இது போன்ற வண்ணப்பூச்சுகளில் மாத்திரம் அல்ல.
ஒரு பொருள், அது மெருகூட்டப்படுவதற்கும், அவ்வாறான செயற்கைப் பொருட்களே மக்களின் மனதை கொள்ளைக் கொள்வதாக அமைவதினாலும் அதனைப் பயன்படுத்தி தனது நிறுவனத்தின் வருமானம் பல மடங்காக உயரும் பொருட்டு இன்னும் அதிகமதிகம் பல்வேறு விதமான வேதியல்/இரசாயனப் பொருட்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்தும் நிலையை நாம் இன்று காண்கிறோம்.
எனினும் அவைகளினால் ஏற்படும் தீங்கு குறித்து ஆராய்ந்து, அவற்றை தவிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததும், அவ்வாறான வேதியல்/இரசாயனத்தை எந்த நிறுவனம் உடனடியாக கை விடுகிறதோ அதுவே எல்லா விதமான இறைவனின் படைப்புகளுக்கும் எதிராக தான் முன்னர் செய்திட்ட கேடுகளுக்கு பிரயாசித்தம் தேடுவதாக அமைகிறது.
அந்த வகையில் செய்தியில் சொல்லப்பட்டுள்ள அபாயமிகுந்த வேதியல்/இரசாயனப் பொருளை பயன்படுத்துவதை கை விட்டிருக்கும் M/s. BERLUX PAINTS (PVT) LIMITED மற்ற நிறுவனங்களுக்கு ஓர் முன்மாதிரியாகும். இந்நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
இலங்கையைத் தொடர்ந்து இந்தியாவும் இந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள வேதியல் பொருள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross