செய்தி: வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து! ஒருவர் பலி! இருவருக்கு பலத்த காயம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நெஞ்சு பதறுகின்றது.... நினைத்துப் பார்கையிலே...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[15 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28050
விபத்து என்பது விரும்பி வருவதல்ல! ஆபத்து என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் நாம் நம்மை சுதாகரித்துக் கொண்டால் விபத்தை ஓரளவிற்கு தவிர்த்துக் கொள்ளலாம்.
சமீப காலமாக நமதூரில் இரு சக்கர வாகனங்கள் அதிகரித்துள்ளதோடு வயது வரம்பிற்கு உட்படாதோர் அதாவது சிறுவர்கள் மூன்று பேருக்கு குறையாமல் விதவிதமான பைக்குகளில் நம் வீதியெங்கும் சாகசம் செய்துவருகின்றனர். பல முறை எச்சரித்தும் அதை அவர்கள் ஒரு பொருடாகவே எடுத்துக் கொள்வதில்லை. இளங்கன்று பயமறியாது. ஆனால் பிள்ளையைப் பெற்றவனுக்குத்தான் அதன் விபரீதம் புரியும்.
கடற்கரையில் மாலை நேரம் அச்சிறுவர்கள் போடும் ஆட்டத்தையும் கூத்துகளையும் பார்த்தால் வளரும் தலைமுறையினரின் இளமைப் பருவம் இப்படியா? என மூக்கில் விரல் வைத்து முகம் சுளிக்கும் வண்ணம் இருக்கின்றது. இவர்களிடம் வாகனத்தைக் கொடுத்து விட்டு, விபத்து என்றதும் பதறியடித்துக் கொண்டு தலை தெறிக்க ஓடி வரும் பெற்றோர்களை நான் கண்கூடாகப் பார்த்ததுண்டு.
காவல்துறையினர் தயவு தாட்சண்யம் பார்க்காமல் இச்சிறுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதமும் விதித்து அவர்களின் பெற்றோர்களை கோர்ட் கேஸ் என அலைக்கழிக்க வேண்டும். இப்படி நான்கு முறை செய்தாலே சிறுவர்கள் மற்றும் பெற்றோருக்கு பயம் வந்து விடும்.
இச்செய்தியில் குறிப்பிட்ட சம்பவத்தன்று நேரில் பார்த்த செய்தியாளர் கூறுகையில், விபத்தில் பலியானவரை புகைப்படம் எடுக்க பல நிருபர்களும் தயங்கினார்களாம். சாலையில் கொட்டிக் கிடந்த குறுதி, சிராய்ப்புகளால் சிதைந்து விழுந்த சதைத்துண்டு, பலத்த காயத்தால் உருக்குலைந்த உடலுறுப்புக்கள் இவைகளையும் தாண்டி அவர் மனோதைரியத்தோடு எடுத்து வந்த புகைப்படங்களை நான் பார்வையிட்டேன். பதறியது நெஞ்சம். ஒரு முறைக்கு மறுமுறை பார்வையிடமுடியாத கோர விபத்தின் கொடூர காட்சி!
யா அல்லாஹ்! இது போன்ற மரணத்திலிருந்து எங்களை பாதுகாத்தருள்வாயாக என கையேந்தினேன். விபத்தின் வீரியத்தை அறிந்து இந்த இழப்பு மற்றவர்களுக்கு ஓர் படிப்பினையாக இருக்கட்டுமே என்றுதான் இரத்தக் கறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் என நினைக்கின்றேன். அத்துனை படங்களையும் போட்டிருந்தால் எத்தனையோ பேர்களுக்கு இரவு தூக்கம் இல்லாமல் போயிருக்கும்.
அன்பு பெற்றொர்களே! உங்கள் பிள்ளைகளின் உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. வாகன விதிகள், சாலை விதிகள் இவற்றை நன்கு உணர்ந்து அறிந்து, அதற்குரிய வயது வந்த பின்னர் வாகனங்களை ஓட்ட முறையான பயிற்சிகளை அளித்து ஓட்டுநர் உரிமத்தோடு வண்டிகளை வாங்கிக் கொடுங்கள்.
சாலையில் சாகசம் புரியாமல் விதிகளை மதித்து நடந்தாலே விபத்துக்களை தடுத்து விடலாம். அல்லாஹ் நம் யாவரையும் பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross