செய்தி: வீரபாண்டியன்பட்டினம் அருகே லாரியுடன் மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியதில் கோர விபத்து! ஒருவர் பலி! இருவருக்கு பலத்த காயம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஜெராக்ஸ் காப்பியை தருகிறேன். posted byN.S.E. மஹ்மூது ( காயல்பட்டணம்)[16 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28079
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த கோர விபத்தை அறியும்போது மனம் மிகவும் வேதனை அடைகிறது – அமைதி பெற முடியவில்லை.
இதில் ஒரு சகோதரர் இறந்திருக்கிறார் – இது அவருடைய குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இருசக்கர வாகனங்களை நிதானமில்லாமல் ஓட்டக்கூடியவர்கள் அனுதினமும் சிந்தித்து மிகவும் கவனமாக ஒட்ட வேண்டும்.
இறப்பு என்பது சொல்லிவிட்டு வருவதில்லை – வாகனத்தை ஒட்டுவதாலோ அல்லது ரோட்டிலே நடந்து சென்றாலோதான் வரும் என்பதில்லை – இறப்பு என்பது பிறந்துவிட்ட ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்டதே!
ஆனால் அந்த இறப்பை இறைவனின் விதிப்படி அடைய வேண்டுமே தவிர நாமாக தேடிப்போகக்கூடாது.
-------------------------------------------
இருசக்கர வாகன விபத்துகளை பற்றி ஒவ்வொரு நாளும் செய்தி தாள்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
நம்ம ஊரை மையமாக கொண்டு கடந்த மார்ச் மாதம் ” இருசக்கர வாகனம் தரும் ஆபத்துகள்! “ என்ற தலைப்பில் எழுத்துமேடை பகுதியில் ஒரு கட்டுரை எழுதினேன், அதை மக்கள் படித்தார்களானால் இந்த மாதிரியான கோர விபத்துகளில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.
-------------------------------------------
என்னுடைய அந்த கட்டுரைக்குப்பின் (கடந்த 3 மாதத்தில்) நமதூர் மக்களுக்கு மட்டும் 20 க்கும் அதிகமான இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்பட்டிருக்கிறது என்பதை மிகவும் வேதனையோடு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
மிக வேகமாக ஓட்டிச்செல்பவர்களை காணும் போதெல்லாம் கையை காட்டி வேகத்தை குறைக்க சொல்ல தவறுவதில்லை – அதை நன்மை என்று உணர்கிறவர்கள் வேகத்தை குறைத்து செல்லத்தான் செய்கிறார்கள் - அலட்சியப்படுத்துபவர்களை பற்றி நமக்கு கவலை இல்லை.
-----------------------------------------
எனவே, பெற்றோர்களே! பெரியோர்களே! உங்களுடைய கடமையை நீங்கள் செய்யத் தவறாதீர்கள்.
தயவு செய்து என்னுடைய ” இருசக்கர வாகனம் தரும் ஆபத்துகள்! “ என்ற கட்டுரையை நீங்கள் படிப்பதோடு உங்கள் மக்களையும் படிக்க செய்யுங்கள் – பயனடையுங்கள்.
அந்த கட்டுரையை படிக்க வாய்ப்பில்லாதவர்கள் எம்மை அனுகினால் இன்ஷா அல்லாஹ்! அதன் ஜெராக்ஸ் காப்பியை தருகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross