எவன் மோசடி செய்தானோ அவன் நம்மை சார்ந்தவன் இல்லை (நபிமொழி) posted byMoulavi Hafil M.S.Kaja Mohideen. Mahlari. (Singapore.)[24 February 2011] IP: 175.*.*.* Singapore | Comment Reference Number: 2840
காசோலை மோசடி செய்தி வுன்மையாக இருக்குமேயானால் இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும்.பொதுமக்களின் அமானித சொத்தை பாழாக்கும் எவரும் தயவு தாட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.இதில் முஸ்லிமோ,முஸ்லிம் அல்லாத எந்த உறுப்பினராக இருந்தாலும் மனசாட்சிப் பிரகாரம்
மக்களுக்கு முன்பு பதில் சொல்ல வேண்டும்.வூழல் ,லஞ்சம்,மோசடி,நம்பிக்கை துரோகம்,
செய்யும் எவனும் இதில் விதிவிலக்கில்லை.மக்களுக்கு சேவை செய்ய வரும் எவரும்
சொந்த வாழ்விலும் ,பொது வாழ்விலும் நம்பிக்கைக் குரியவராக இருக்க வேண்டும்.
அந்த தகுதி இல்லாதவர்கள் தானாகவே
விலக்கிக்கொள்ள வேண்டும்.தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து மக்கள் பணிக்கு அனுப்புவது மக்களின் கடமையாகும்.நமது
நகர்மன்ற தலைவர் அவர்கள் தன் வாழ்விலும் ,பொதுவாழ்விலும் அப்பழுக்கற்றவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிந்து
வுள்ளோம்.அவர்கள் இப்படி இருப்பது கூட சில வுருப்பினர்களுக்கு பிடிக்கவில்லை.காரணம் தனது திருகு தாளங்களுக்கு
அவர்களின் ஒத்துழைப்பு இல்லையே என்பது சில வுருப்பினர்களின் ஆதங்கம்.எனவே பொது மக்களே இந்த விசயத்தில்
நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருந்தால் தான் எதிர்வரும் புதிய நகர்மன்ற நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.எனவே நாம்
சிந்தித்து செயல் புரிவோமாக! வல்ல அல்லாஹ் அதற்கு துணை புரிவானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross