செய்தி: ஜூன் 27 அன்று காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பால் ஒத்திவைப்பு!! வீடியோ காட்சிகளுடன் விரிவான விபரங்கள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வேதாளம் மீண்டும் ...... posted byAbdul Wahid S. (Kayalpattinam)[06 July 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 28423
Pre planned walk-out drama.
1) Agenda வில் இல்லாத ஒரு விசயத்தை Agenda விலுள்ள
விவாதப் பொருட்களுக்கு முன் விவாதிக்க வேண்டும் என்று
பிடிவாதம் பிடிப்பது தரமற்ற செயல்.
2) கொம்புத்துறை, சிங்கித்துறை விசயத்தில் இவ்வளவு அக்கறை கட்டக்கூடியவர்கள் ஏன் மரைக்கார் பள்ளி தெரு (கடற்கரைத் தெரு), அசாத் தெரு (துஷ்டராயர் தெரு)
விசயத்தில் வருஷம் பலவாகியும் அக்கறை இல்லை.
அக்பர் ஷா தெரு, வாவு நகர் etc., இதெல்லாம் யாரை கேட்டு வந்ததாம். எந்த அரசாங்க ரெகார்டில் இருக்கிறதாம்?
வேதாளங்கள் போடும் ஆட்டத்தை மக்கள் முன் கொண்டு செல்லும் Media மீது வேதாளம் குறி வைத்தது. நகராட்சிக் கூட்டத்தை Media யாக்கள் Video எடுப்பதை தடுத்தார்கள். அதற்காக ஒரு வெளிநடப்பும் செய்தார்கள். "Video எடுப்பதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று High Court (Madurai Bench) மூலம் தீர்ப்பு (இவர்களுடைய பாசையில் சொல்வதானால் "ஆப்பு") வந்தவுடன் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிட்டது.
அந்த வேதாளத்தின் பார்வை ஒரு web site மீது பாய்ந்தது. ரமழானில் சைத்தான் கட்டிப்போடப்படுவான் என்பதை நாம் அறிவோம். அனால் வேதாளம்.......? . கடந்த ரமழானில் அந்த வேதாளம் இந்த web site ஐ முடக்க போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது. போலீஸும் தன் பங்கிற்கு விசாரித்ததில் web site ஐ முடக்க தனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டது. வேதாளம் வேறு வழியில்லாமல் மீண்டும் தனது இருப்பிடத்திற்கு (முருங்கை மரத்திற்கு) சென்றது.
(Web site ஐ இல்லாமல் ஆக்குவேன் என்று வீரவசனம் பேச வைத்தவர்கள் எல்லோரும் இன்று web site களுக்கு பின்னால்
ஒளிந்து கொண்டிருப்பது வேறு விஷயம்)
அதே வேதாளம் கிழிறங்கி வந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நகராட்சி தலைவியை பதவியிறக்கம் செய்ய முயற்சித்தது. அந்த தீர்மானமும் நீதிமன்றத்தின் மூலம் முறியடிக்கப்பட்ட (ஆப்பு வைத்த) பின் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.
இப்போ அந்த வேதாளத்தின் குறி (நகராட்சி கூட்ட) பார்வையாளர் மீது பாய்ந்துள்ளது. பார்வையாளராக யாரும் வரக்கூடாது என்று சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சதிவேலையை முறியடிக்க அடுத்த மாதக்கூட்டத்திற்கு மக்கள் அதிகமாக செல்ல வேண்டும்.
கடந்த 20 மாதத்தில் 7 வெளிநடப்புகள். அனைத்தும் பொட்டை காரணங்கள்.
நகராட்சியை வைத்து காசு சம்பாதிக்க முடியாதவர்கள், அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறார்கள்.
வேதாளங்கள் (கீழே இறங்காமல்) நிரந்தரமாக முருங்கை மரத்திலேயே இருக்க என்ன என்ன செய்யவேண்டுமோ அதனை
பொதுமக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் நீதி மன்றத்தின் மூலம் பெறப்படும் ஆப்புகள் (தீர்ப்புகள்) வேதாளம் விசயத்தில் நிறந்தரமாக செயல் பட வாய்ப்பில்லை.
இல்லையென்றால் இதுபோன்று வேதாளம் அடிக்கடி கீழிறங்கி அப்பப்போ தொல்லை கொடுக்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross