காட்டுக்குள்ளே திருவிழா...! posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[07 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28432
மலைப்பாடகனே! பொதிகை மலையின் வனப்பகுதிக்குள் நுழந்தேன். மழை சாரல் அடித்தது. நனைந்த உடல் சிலிர்க்க குளிந்த காற்றும் வீசியது. மாலையில் குளித்தேன்.
மருத்துவ குணமிக்க மூலிகை உணவும், மலையடிவாரத்தின் மங்கிய வெளிச்சமும் மனதைத் தொட்டது. காலையில் எழுந்து காலாற நடந்த போது பறவைகளின் ஒலி உற்சாகத்தை தந்தது. கானிகளின் பாட்டும் காய்ச்சிய கூழும் இன்பமாக இருந்தது.
இயற்கை அன்னையின் மடியில் இரவைக்கழித்தும் இனிய நினைவுகள்தாம். கொடிய விலங்குகள், விஷப் பாம்புகள் நிறைந்த வனம் தான் என்ன அமைதி? எத்தனை அழகு? வனப்பு மிக்க மலை முகட்டில் எம்மை அழைத்துச் சென்று வாழ்வியலின் தத்துவத்தை உணர்த்தியமைக்கு கோடான கோடி நன்றி...!
சுய நினைவு வந்தபின்:
அட! அதுக்குள்ளே கட்டுரை முடிந்துவிட்டதே...? என் தலையிலும் தோள்களிலும் படிந்திருந்த கானகத்தின் மரம் உதிர்த்த காய்ந்த சருகுகளை உதறிவிட்டு எழுந்தேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross