Re:...புதுமை பெண்கள் posted bymackie noohuthambi (kayalpatnam)[16 July 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28693
பாரதியார் சொன்ன புதுமை பெண்கள் அல்ல இவர்கள். அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொல்லும் நெறிமுறையை பின்பற்றி தங்கள் கற்பு நெறியை காத்து இந்த ஊரின் பெருமையையும் உலகறிய செய்யும் பதுமை பெண்கள். வாழ்த்துக்கள்.
ஒரு காலத்தில் திருமறையை மனனம் செய்வது என்பது ஆண்களுக்கு மட்டுமே முடியும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இப்போது பாருங்கள். எனது மகள் முதல் திருமறை செல்விகளாக ஊரில் புனித ரமலானில் தைக்காகளில் தொழுக வைக்கிறார்கள். மு அஸ்கர் ரஹ்மான்,அரூசுல் ஜன்னாஹ், ஆயிஷா சித்தீக்கா, நசூஹா, அன்னை கதீஜா என்று பல் வேறு மதரசாக்கள் பெண்கள் கல்லூரிகளாக பரிணாம வளர்ச்சிபெற்று அங்கெல்லாம் புனித திருமறையை மனனம் செய்யும் பெண்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
அன்னை ஆயிஷா அவர்கள், நபிகள் நாயகம் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டு செல்லும்போது அவர்களுக்கு வயது 18 என்கிறார்கள் உலமாக்கள்.ஆனால் அநேகமான ஹதீத்கள் அவர்கள் மூலம் ரிவாயத் செய்யப்படுகிறது. இது போல் எண்ணில் அடங்காத இளம் சஹாபிய பெண்மணிகள் சரித்திர நாயகிகளாக வலம் வந்திருக்கிறார்கள். காயல்பட்டினத்தில் ஓதுவதற்கு வெளி ஊர்களில் இருந்து பெண்கள் வரும் செய்தி நம் நெஞ்செல்லாம் இனிக்க செய்கிறது. கல்லூரியில் படிக்கவும் இப்படி கூட்டம் அலைமோதுகிறது அல்ஹம்து லில்லாஹ்.
சில குறைகள் நம்மிடம் இருந்தாலும் நிறைகள் நிறையவே இருக்கின்றன. இப்போது உலக கல்வியிலும் தடம் பதித்து செல்லும் மாணவிகள் அதிகரித்து வருகிறார்கள். இந்த மண்ணுக்கே உரிய மாண்பு இது. இதனை கட்டி காக்கவும் பேணி வளர்க்கவும் நமது பெரியோர்கள் கடமைபட்டிருக்கிரார்கள்.
அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் அதே வேளை, நமது இஸ்லாமிய கலாச்சாரம் பண்பாடு இவற்றுக்கு ஊறு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதும் மாணவிகள் கடமை ஆகும் என்பதையும் ஆசிரிய ஆசிரியைகள் அவர்களுக்கு போதிக்க வேண்டும். அல்லாஹ் இந்த மண்ணின் பெருமை காக்கும் மாணிக்கங்களாக இந்த பெண்மணிகளை ஆக்கி வைப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross