செய்தி: மாணவியர் உதவித்தொகை குறித்த ம.சே.கரங்கள் - தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி விவகாரம்! மாவட்ட கல்வி அதிகாரி முன்னிலையில் இக்ராஃ துணையுடன் தீர்வு காணப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்கள் சேவாக்கரங்கள் தன்னிலை விளக்கம். posted byPalappa Jalali (Kayalpatnam)[28 February 2011] IP: 123.*.*.* India | Comment Reference Number: 2918
மாணவியர் உதவித் தொகை குறித்த தீவுத் தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி விவகாரம் மக்கள் சேவாக்கரங்கள் தன்னிலை விளக்கம்.
சேவை செய்தது ஒரு அமைப்பு. பெயர் வாங்குவது இன்னொரு அமைப்பா?
சிறுபான்மை மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதில் உள்ள விதிகளுக்கு அப்பாற்பட்டு, சில விபரங்கள் கூடுதலாக தீவுத் தெரு அரசு மகளிர் மேனிலைப் பள்ளி தலைமையாசிரியையால் வேண்டப்பட்டதன் விளைவாக எமது அமைப்பிற்கும் மேற்படி தலைமையாசிரியைக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டன. இதன் கோப்பு போட்டோக்களையும், செய்திகளையும் கடந்த 15-10-2010 அன்று www.kayalpatnam.com இணையதளத்தில்
தாருத்திப்யான் நெட்வொர்க் மூலம் பதிவேற்றம் செய்ததை படித்தறிந்திருப்பீர்கள்.
சட்டவிதிகளுக்கு அப்பாற்பட்டு, மாணவியர்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்பட்டதை தவிர்க்க வேண்டி சம்பந்தப்பட்ட கல்வி அமைச்சர், கல்வி அலுவலர்களிடம் முறையீடு செய்யப்பட்டது. அதன் பயனாக, விதிமுறைகளுக்கு உட்பட்டு தலைமையாசிரியை
செயல்பட்டு, மாணவியர்களின் குறைகளை நிவர்த்தி செய்து தர முன்வந்தார் தலைமையாசிரியை. காலத்தின் கட்டாயம் கருதியும், மாவட்ட கல்வி அதிகாரியின் அறிவுறுத்தலின்படியும் தலைமையாசிரியை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றினார்.
ஆனால் சில மாணவியர்களிடம் மட்டும் 'எங்களுக்கு Scholarship தேவையில்லை' என்று கூறி பெற்றோர்களின் ஒப்புதல் இன்றி மாணவியர்களிடம் கடிதம் எழுதி வாங்கி வைத்திருந்தார் தலைமையாசிரியை. அந்த கடிதங்களை அகற்றி, திரும்ப மாணவியர்களிடம் ஒப்படைக்க வேண்டியும், அந்த மாணவியர்களிடம் மீண்டும் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று, உதவித் தொகை கிடைக்க ஏற்பாடு செய்து தர தலைமையாசிரியையிடம் நாங்கள் வேண்டினோம். அதற்கு தலைமையாசிரியை மறுத்து விட்டார். எனவே, வெகுண்டு எழுந்து, வழமை போல் மாவட்ட கல்வி அலுவலர் செ. தமிழ்ச்செல்வியிடம் முறையீடு செய்தோம்.
அண்மையில் 17-12-2011ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற சிறுபான்மை கமிஷன் சிறப்பு கூட்டத்தில் அழைப்பாளராக கலந்து கொண்ட எமது அமைப்பின் நிறுவனராகிய நான், மேற்படி மாவட்ட கல்வி அலுவலரிடம் வேண்டிக் கொண்டபடி, அவர்கள் நமதூருக்கு வருகை தந்து இந்த லெட்டர்கள் கிழித்து போடும் விவகாரத்தை முடித்து தருவதாக வாக்களித்து, அதன் பயனாக கடந்த 22-02-2011ம் தேதி மதியம் 2:30 மணியளவில் தீவுத்தெரு பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு வருகை தந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்.
இது முழுக்க முழுக்க, மக்கள் சேவாக் கரங்களின் சேவையே தவிர, வேறு எவர்களது துணையும் இல்லை என்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகின்றோம்.
சாட்சிக்காகவும், தகவல் தொடர்பை வெளிப்படுத்த மட்டுமே, சில கல்வி ஆர்வலர்கள் அழைக்கப்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் யாரையும் இது விஷயமாக சமரசம் செய்து வைக்க அழைக்கவும் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறோம்.
இதன் பின்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட விபரங்கள் மாவட்ட கல்வி அதிகாரி மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதால் தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதை பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
இது போன்ற விஷயங்களில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
நன்றியுடன்.
பா.மு. ஜலாலி
நிறுவனர்
மக்கள் சேவாக்கரங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross