பதில் கிடைக்குமா..???? posted byமுத்துவாப்பா (al khobar)[28 February 2011] IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2919
காயல்பட்டிணம் செய்திகளை உடனுக்குடன் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே.. ஆனால் தங்கள் இணையதளம் பற்றி நான் சில
கருத்துகளையும் என்னுடைய கேள்விகளையும் இங்கே பதிவு செய்கிறேன்.
1) தங்கள் இணையதளத்தில் POST YOUR COMMENT அப்படி ஒன்று எதுக்கு வைத்துள்ளீர்கள் என்று எனக்கு கொஞ்சம் எனக்கு புரியாத புதிராகவே இருக்கிறது காரணம் Moderator என்ற பெயரில் வாசகருடைய மன கருத்துகளை அப்படியே பிரதிபலிக்க தாங்கள் தவறிவிடுகின்றீர்கள். Moderator உடைய வேலை என்னவென்றால் அந்த கருத்தில் ஆபாசம் இருந்தால் மட்டுமே நீக்க வேண்டுமே தவிற யாருக்கு கருத்துக்கள் ஆதரவாக இருக்கின்றது என்று தாங்கள் பார்க்ககூடாது. உங்கள் கருத்துகளை தாங்கள் செய்திகளில் பிரதிபலிக்கின்றீர்கள். எங்கள் மனக்குமுறலை நாங்கள் இங்குமில்லை என்றால் எங்கு சென்று பிரதிபலிப்பது....??
2) கசாலி மரைக்கார் அவர்களுடைய புகைப்படத்தை இன்னும் ஏன் தாங்கள் நீக்காமல் இருக்கின்றீர்கள் என்ற கேள்வி காயல் மக்கள் அனைவருடைய மனதிலும் ஒரு கேள்வி குறியாகவே இருக்கின்றது. அது பற்றி தாங்கள் கூறியதாக என் நண்பர் ஒருவர் கூறுகையில் கசாலி மரைக்கார் பதவியில் இருந்த காலத்தில் நாம் அவரை வைத்து தான் நகராட்சி செய்திகளை பெற்று வந்தோம் அதனால் அவரையும் நாம் பகைத்து கொள்ள முடியாது ஆகையால் ஒரு வாரம் கழித்து அவருடைய புகைப்படத்தை நீக்குவதாக தங்கள் தரப்பில் இருந்து கூறியதாக அவர் கூறினார். இந்த தகவல் உண்மை தானா ? , அப்படி இந்த தகவல் உண்மை என்றால் நீங்கள் அவரை பற்றிய செய்தியே வெளியிட்டு இருக்க கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நாம் தட்டி கேட்க முடியாவிட்டாலும் நம்மால் முடிந்ததையாவது செய்ய வேண்டாமா....??
3) இந்த கருத்தை நீங்கள் வெளியிட்டு பாருங்கள் என்னுடைய இந்த கருத்து எத்தனை ஆயிரம் காயலரின் கருத்து என்பது தங்களுக்கு தெரிய வரும்.
இந்த கருத்துகள் தங்களது மனதை காயபடுத்தி இருந்தால் இந்த சகோதரனை மண்ணித்துவிடுங்கள் . தங்களது இணையதளம் மெம்மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross