செய்தி: வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் மணல் சுரங்கங்களை பரிசோதனை செய்ததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம்: டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்க அம்மம்மா நாமம். posted byAbdul Wahid S. (Kayalpattinam)[07 August 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29267
"..... அதன் பிறகு தனக்கு மாற்றல் ஆணை கிடைத்ததை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார், இரு விசயங்களுக்கும் தொடர்பு உள்ளது எனக்கூற மறுத்துவிட்டார்". (C & P )
இந்த விசயத்தை அரசியலாக்க விரும்பாதது நமது மாவட்ட ஆட்சியரின் பெருந்தன்மையை காட்டுகிறது. இருந்தாலும் இவர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். மக்களுக்குத் தெரியும் ஏன் இவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது.
இந்த Sand மாஃபியாக்கள் எல்லாம் ஆளுங்கட்சியின் Financiers & Heavy Weight களாவார்கள். மேலும் Jaya TV யின் shareholders ஆவார்கள். ஆதலால் அம்மாவின் கருணைப் பார்வை நமது மதிப்பிற்குரிய ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் அவர்கள் மீது பாய்ந்துள்ளது.
போன வாரம்தான் ஒரு முதலமைச்சரின் ( அகிலேஷ் யாதவ் - உ.பி) சுயரூபம் தெரிய வந்தது. துர்கா சக்தி நாக்பால் என்ற பெண் I.A.S. அதிகாரி அங்குள்ள Sand Mafi யாக்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததால் பொய் காரணங்கள் கூறப்பட்டு இரவோடு இரவாக இடை நீக்கம் செய்யப்பட்டார். அகிலேஷ் யாதவ் கூறிய காரணம். ஒரு பள்ளிவாசல் சுவற்றை இவர் இடிக்க உத்தரவு பிறப்பித்ததால் மதக் கலவரம் ஏற்பட காரணமாகிவிட்டார் என்பதே. ஆனால் அப்படி ஒரு நிலைமை அங்கு ஏற்படவில்லை என்று அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் இந்த முதலமைச்சருக்கு எதிராகவும் அந்த இளம் பெண் அதிகாரிக்கு ஆதரவாகவும் போர்க்கொடி தூக்கியது நம்மில் பலருக்கு தெரியும்.
D.C.W. , Sterlite போன்ற நோய்களை பரப்பும் தொழிற்ச்சாலைக்கு எதிராக, பொதுமக்கள் நலத்தில் அக்கறை கொண்ட செயல்பட்ட நல்லதொரு ஆட்சியரை இழந்த்தது நமது துரதிஷ்டம்.
நமக்கு நல்லதொரு ஆட்சியர் அமைந்துவிட்டார், இவரது பணி அதிக வருடங்கள் நீடிக்கவேண்டும் என்று நம்மில் பலர் எண்ணியதுண்டு.
மக்களுக்காக நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் செய்யும்
மக்கள் தொண்டு. வாழ்க அம்மம்மா நாமம், வளர்க பணநாயகம். இதுதான் நமது ஜனநாயகம்.
புதிய பொறுப்பை ஏற்க இருக்கும் நமது முன்னாள் ஆட்சியருக்கு எமது வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross