செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மதுரையில் அடிபட்டவன் மானாமதுரையில் போய் மீசையை முறுக்கினானாம் posted bymackie noohuthambi (kayalpatnam)[17 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29536
நகராட்சியில் நடந்த நாடகம் பற்றிய செய்திகள் இந்த இணைய தளத்தில் இன்றுதான் வெளி வந்துள்ளது. ஆனால் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊர் வந்த சிலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுட சுட மற்றவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.
தலைவர் மீது நம்பிக்கை இல்லை என்ற புகார் யாரிடம் கொடுக்கப்பட்டதோ அவர் இது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது. அதற்காக நகரமன்ற கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்று உறுப்பினர்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.
சம்பதப்பட்டவரின் அலுவலகத்தில் அல்லது அவரது வீட்டில் சென்று அங்கே உண்ணா விரதம், ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவைகளை மேற்கொண்டு அவரின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும்.
அல்லது அவரைப்பற்றி மேல்முறையீடு செய்ய வேறு வழியை பார்த்திருக்க வேண்டும்.
அல்லது தலைவி மீது வழக்கு தொடர்ந்து ஒரு நல்ல திறமையான வழக்கறிஞர், சாந்தி பூஷன் போன்றவர்களை தேர்ந்தெடுத்து வழக்காட முயர்ச்சி செய்திருக்க வேண்டும்.
அல்லது உறுப்பினர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இருக்கவேண்டும்.
அல்லது தலைவியை தேர்ந்தெடுத்த மக்கள் எல்லோரிடமும்சென்று தலைவிமீது நம்பிக்கை இல்லை என்று எழுதி கை எழுத்து வேட்டைக்கு ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.
அல்லது ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து தலைவி மீதுள்ள குற்றச்சாட்டுக்களை மக்கள் முன் எடுத்து வைத்து இருக்க வேண்டும்.
இவ்வளவு வழிகள் உறுப்பினர்களுக்கு இருக்கும்போது நகரமன்ற கூட்டத்தில் கொண்டுவர இருந்த முக்கியமான ஊர் நலம் சம்பந்தப்பட்ட விஷயங்களை குறைந்த பட்சம் விவாதிக்கவாவது செய்திருக்க வேண்டும்.
ஒரு பெண்தான் இந்த ஊரின் நகரமன்ற தலைவராக வரவேண்டும் என்ற அரசு ஆணையை கொண்டு வந்ததே புரட்சி தலைவியின் அரசுதான். அந்த அரசிற்கு ஆதரவாக எல்லா உறுப்பினர்களும் ஒரே நாளில் கட்சி மாறியது உறுப்பினர்களின் நாணயத்தை சந்தேகிக்க வைத்த முதல் காரியம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அவர் தவறு செய்தால் அவர்களை மக்கள் முன் நிறுத்தி தண்டிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
இத்தனையும் விட்டு விட்டு கொல்லைப்புறம் வழியாக, குறுக்கு வழியில் ஒரு நகரமன்ற தலைவரை வெளியேற்ற முடியுமா.
மதுரையிலே அடிபட்டவன் மானாமதுரையில் போய் யாரடா என்னை அடித்தது என்று மீசையை முறுக்கினானாம் என்ற பழமொழி கேள்விப் பட்டிருக்கிறோம். கொக்கு மீனை தின்னுமா இல்லை மீனு கொக்கை முழுங்குமா என்ற பாடல் கேட்டிருக்கிறோம்.எய்தவன் இருக்க அம்பை நொந்து என்ன பிரயோஜனம் என்ற முது மொழி கேள்விப்பட்டிருக்கிறோம். இத்தனையும் உண்மைதானோ என்று எண்ணுவதற்கு நமது மதிப்புக்குரிய உறுப்பினர்கள், அந்தந்த வார்டு உறுப்பினர்கள் வழி வகுத்து விட்டார்களே, வேதனையாக இருக்கிறது.
என்ன தவறுகள் செய்தாலும் நமது தமிழ்நாடு அரசாகட்டும் மத்திய அரசு ஆகட்டும் 5 ஆண்டுகள் முடியும் வரை அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நமது அரசியல் சட்டம் நம்மை தடுக்கிறது, நமது கைகளை கட்டிப் போடுகிறது.
முறையான அணுகுமுறை அடுத்த தேர்தல்தான். அதற்கு ஏற்பாடு செய்ய ஏதாவது வழி இருக்கிறதா என்று பாருங்கள். தலைவியை ஆட்சியை விட்டு அகற்ற இதுதான் ஒரே வழி.
சட்டசபையில் இருந்து வெளி நடப்பு செய்பவர்கள் எல்லாம் முதல் அமைச்சர்கள் ஆக முடியாது. அது MGR ,.கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களுக்கு விதி விலக்கு. விதி விலக்குகள் வழிகாட்டிகளாக ஆக முடியாது.
முறையாக சிந்தித்து ஆக வேண்டியதை கவனியுங்கள். வேகத்தை விட விவேகமே மேல்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross