செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bynizam (india)[17 August 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 29537
இதை ஒரு நகராட்சியின் செயல்பாடு என்பதை விட காயல்பட்டணம் எங்கே போய் கொண்டு இருக்கிறது என்பதகத்தன் கொள்ளவேண்டி இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நகராட்சி உறுப்பினரும் நகராட்சி தலைவரும் நம்மில் இருந்து நம்மால் தேர்ந்தெடுக்கபட்டவர்கள்தானே.
தனது சொத்து உழைப்பு எல்லாம் அர்பணித்த நமது மூதாதையர்கள் போஸ்ட் ஆபிஸ் இச்டேசன் பள்ளி முத்து சாவடி உண்டாக்கினார்கள். இப்போது என்னவென்றால் அரசாங்க வரிபணத்தை ஊர் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த கூட மனம் இல்லை. நான் திரும்பவும் கடந்த கமெண்டில் குறிப்பிட்டதுபோல மீண்டும் சொல்கிறேன். இவை அனைத்துக்கு காரணம் இந்த கேடுகெட்ட ஈகோ. இதன் விளைவை நன்கு அறிந்த அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள் பெருமை கொண்டவன் போகுமிடம் நரகம்தான் என்று. இந்த ஈகோ இல்லாததால் நம்மை சுற்றி உள்ள ஊர் பஞ்சயாத்துகள் எவ்வளவு ஒற்றுமையோடு செயல்பட்டு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுகிறார்கள்
மற்றொரு காரணம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான அதிகார வரம்புகளை பற்றி சரியான புரிதல் இல்லாதது. லஞ்சத்துக்காத்தன் இந்த விளையாட்டெல்லாம் நடக்கிறது என்பது ஏற்புடையது அல்ல. ஏனெறால் கணிசமான உறுப்பினர்கள் செல்வத்தில் தன்னிறைவு பெற்றவர்கள். பாரம்பரிய குடுமபத்தை சார்ந்தவர்கள். அவர்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை
நம்மை நம் ஊரை பற்றி இழிவாக பேசுமுன் இந்த ஊரின் பிரபலமான சமுகவியலார்களும் சட்ட நிபுணர்கள் மார்க்க அறிஞர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பது அவசியம் தவறினால் நாளை இறைவனின் மக்சரிலே குற்றவாளியாக நிற்பது நிச்சயம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross