செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த இலவு காத்த கிளிகள். posted byAbdul Wahid S. (Kayalpattinam)[19 August 2013] IP: 123.*.*.* India | Comment Reference Number: 29556
ஐக்கிய பேரவையால் கை காட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சேர்மனுக்கு அப்போதிருந்த உறுப்பினர்கள்
(இப்போதுள்ள இரு உறுப்பினர்கள் உட்பட) கொடுத்த அழுத்தம் என்வென்றும் அதன் விளைவு என்னவென்றும் (ராஜினாமா கடிதம் கொடுத்தது) மக்கள் நன்கறிவார்கள். இன்னும் மக்கள் மனதிலிருந்து அந்த காட்சிகள் விலகவில்லை. அப்போதைய உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கு புளித்தது. அதே செயல்களை செய்ய முயற்சிக்கும் இந்நாள் உறுப்பினர்களின் செயல்கள் இவர்களுக்கும் இவர்களின் அனுதாபிகள் என்ற போர்வையிலிருக்கும் ஜால்ராக்களுக்கும் இனிக்கிறதோ?
எது ஊர் ஜமாஅத்? பெரும்பாலான ஊர்மக்களால் சுயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்கத் தெரியாத ஒரு கும்பல் எப்படி ஊர் ஜமாஅத் ஆகும்? கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுக்காமல் yethu இவர்களைத் தடுத்ததோ அதுதான் "Ego".
இவர்களின் ஜால்ராக்களை ஊருக்கு நன்மை செய்யத் துடிக்கும் ஒரு தலைவிக்கு எதிராக பேச / எழுத வைப்பதுதான் Ego.
ஊர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவிக்கு அளிக்கும் மரியாதை ஊருக்கு அளிக்கும் மரியாதை என்ற சராசரி ஞானம் கூட இல்லாதவர்கள் எப்படி ஊரை வழிநடத்த முடியும்?
எது ஊர் ஜமாஅத் என்பதை ஊர் மக்கள்தான் முடிவுபண்ண வேண்டும். ஊரிலுள்ள பணக்கார்கள் சேர்ந்த ஒரு கூட்டமோ அல்லது அவர்களை ஆதரிப்பவர்களோ அல்ல.
முன்னாள் பேரூராட்சி தலைவருக்கும் இந்நாள் நகராட்சி தலைவிக்கும் உள்ள ஒரு நிதர்சனமான வேற்றுமை என்னவென்றல், முன்னாள் தலைவர் லஞ்சத்திற்கு எதிராக நின்று தோற்றுப்போனார். "உங்களை திருத்த முடியாது எப்படியும் தொலைந்து போங்கடா" என்று கூறி ஒதுங்கிவிட்டார்.
இன்னாள் தலைவி சற்று மாறுபட்டவர். இன்ஷா-அல்லா ஓயமாட்டார், ஒதுங்கமாட்டார். மேலும் நகராட்சியை Remote Control மூலம் தனி நபர் இயக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.
இதை புரிந்துகொள்ள முடியாத(வர்கள்) இவரின் செயலை "Ego" என்றழைகிறார்கள்.
ராஜினாமா செய்துவிடுவார் என்று நினைத்து தலைவிக்கு பிரச்சனை கொடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. மீடியா நகாட்சிகுள் வரவிடாமல் தடுக்க முயன்றார்கள். வந்தவரின் மீது பொய் வழக்கு தொடர்ந்தார்கள். அதன் மூலம் தலைவியை தனியாக நினைத்தார்கள். அதற்க்கு நீதிமன்றமே டபுள் ஆப்பு வைத்துவிட்டது. மக்களும் அதிய எண்ணிக்கையில் வர ஆரம்பித்துள்ளார்கள். நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவர முயன்றார்கள் முடியவில்லை. முதல் கட்டத்திலேயே தலையில் இடி விழுந்தது. இப்போது பதவி நீக்கம் செய்ய முயன்றுள்ளார்கள். "இலவு காத்த கிளைகள்" என்ற சொற்றொடர் இவர்களைவிட யாருக்குப் பொருத்தம் / பொருந்தும்?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross