செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! உறுப்பினர்கள் வெளிநடப்பு!! நகர்மன்ற நடப்பு நிலை குறித்து பொதுமக்களுக்கு நகர்மன்றத் தலைவர் விளக்கம்!!! (அசைபட காட்சிகளுடன்) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ்வை அஞ்சுங்கள். posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[19 August 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29557
ஊர் நலனில் அக்கறையும் அனைத்து ஜமாத்தார்கள் ஆற்றும் நல்லெண்ண பணிகளில் முதன்மையாகவும், முற்றிலும் மாற்றமான சிந்தனையுடனும் செயல்படும் என்தாய் பள்ளியாம் "தாயும் பள்ளி" ஜமாஅத்தார்கள் நம் நகராட்சி தலைவியை அழைத்து விளக்கம்கேட்டு ,மற்றைய ஜமாத்தார்களுக்கு முன்மாதிரியாக விளங்கியதை எண்ணி உள்ளமகிழ்கிறேன்!
அந்த கூட்டத்தில் அந்த ஜமாத்தைச்சார்ந்த இருவார்டு (10 வது, 11 வது) உறுபினர்கள் கலந்துகொண்டார்களா, என்பது தெரியவில்லை. அவர்கள் கலந்திருந்தால் நல்லதொரு விளக்கம் பெற்றிப்பார்கள்!.
அந்த ஜமாஅத் சகோதரர் ஒருவர் தன் கருத்தை பதியும் பொழுது, தலைவி அவர்கள் உறுப்பினர்களைத்தான் குற்றம் சுமத்தினார்கள், மேலும் ஜமாதர்களிடையே பிரிவை ஏற்படுத்தும் குறையையும் சொன்னார்கள், என்ற அந்த சகோதரரின் வாசகத்திலிருந்து, அக்கூட்டத்தில் அந்த ஜமாஅத் வார்டு உறுபினர்கள் இருவர் கலந்து கொள்ளவில்லை என்றுதான் விளங்க உள்ளது!
மற்றைய அனைத்து ஜமாதார்களே!
தாயும் பள்ளி ஜமாஅத், தலைவியை அழைத்து விளக்கம் கேட்டதுபோல், தாங்களும் தங்கள் ஜமாத்தின் மூலம் தலைவியையும், உங்கள் ஜமாஅத் வார்டு உறுப்பினரையும் சேர்த்து அழைத்து விளக்கம் கேட்பதோடு ,யார் மீது தவறு இருந்தாலும் காய்தல் உவத்தல் இன்றி அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக நல்லதொரு முடிவு எடுப்பதோடு,உங்கள் பகுதியில் தேங்கி நிற்கின்ற மக்கள் நலப்பணிகள் தொடர்ந்து நடைபெற முயற்சி எடுத்து நல்ல தொரு முடிவுக்கு வாருங்கள்.இது தான் தற்போதுள்ள சூழ்நிலையில் சாத்தியமாகும் நல்லதொரு வழிமுறையாகும்!
உறுப்பினர் வந்தால் நான் வரமாட்டேன் என்று தலைவியோ ,தலைவியை அழைக்கும் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன் என்று உறுப்பினரோ சொல்வார்களேயானால், மறுப்பவர் எவரோ அவரின் முகத்திரையை இந்த ஊருக்கு முன்னால் கிழித்தெறிந்து உண்மை நிலையை நிலைநாட்ட வேண்டியது அந்தந்த ஜமாத்தார்களின் கடமையாகும்!
அன்பு சகோதரி தலைவி அவர்களே, அருமை சகோதர சகோதரிகளாகிய உறுப்பினர் பெருந்தகைகளே!
உங்களுக்குள்ள கொள்கை வேற்றுமையானது உங்கள் உரிமை. ஒருவர் மற்றொருவர் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டி பதவி விலக விண்ணப்பிதிருக்கிறீர்கள். உங்களின் புகார் மனுவை நீதி மன்றம் முதல் முக்கிய பொறுப்பதிகாரிகள் வரைக்கும் சேர்ப்பிதுள்ளீர்கள். அது அதன் வேலையை ஒரு பாதையில் செய்து கொண்டிருக்கிறது!
அதே நேரம், மற்றுமொரு பாதையில் ஊர் நலனில் அக்கறை வையுங்கள். எவ்வளவோ மக்கள் நலப் பணிகள் தேங்கி நிற்கிறது. அதனால் மக்களாகிய நாங்கள் தவங்கி நிற்கிறோம். தயவு செய்து அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக, ஊருக்காக உங்கள் உடன்பிறவா சகோதர குடும்பங்களின் நலனுக்காக மக்கள்நலப்பணி நடைபெற ஒத்துழையுங்கள்.
அல்லாஹ் அதற்க்குண்டான கூலியை உங்களுக்கு வழங்குவான்!
மாறாக ,வரட்டு பிடிவாதமே தொடர்கதையானால், ஊரார்களின் பதுவாவிற்க்கு ஆளாக நேரிடும் என்பதை மிகவும் மனவேதனையுடன் இங்கு விதைக்கிறேன்!
எந்த ஒரு பெண் குலத்தையோ, அல்லது அப்பாவி ஆண்மகனின் மீதோ அவதூறு சுமத்தும் எந்த ஒரு கொடியவரும், இந்த உலக சக்தியின் மூலமாக வேண்டுமானால் மீளலாம், ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன் கோபப்பார்வையை கடுகளவு பாய்ச்சினால் போதும், அவர் மட்டுமல்ல அவரின் குடும்பமே நிற்கதியாகிவிடும்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross