Re:... posted byVilack SMA (shiqiao ,Guangzhou)[26 August 2013] IP: 183.*.*.* China | Comment Reference Number: 29707
சென்ற வாரம் நான் ஊரில் இருந்த சமயம் , குத்துக்கள் தெரு , சதுக்கை தெரு , அம்பலமரைக்காயர் தெரு , மூன்று இடங்களிலும் பந்தல் போட்டு இரண்டு நாட்களாக தெருவை அடைத்திருந்தார்கள் .அன்று இரவு இரயில் நிலையம் செல்வதற்காக , என் மகனை பைக்கில் ஏற்றிக்கொண்டு , முக்கியமான இந்த தெருக்களின் வழியாக சுலபமாக செல்ல முடியாமல் , ஊரை சுற்றி , நான் இதுவரை ஊரில் பார்த்தே இராத தெருக்களைஎ ல்லாம் சுற்றி வந்து , இரயில் நிலையம் அடைவதற்குள் இரயில் வந்து , ஓடும் இரயிலில் தொற்றிக்கொண்டு ஏறினான் என் மகன் .
அன்றைய தினம் காலையில் , சதுக்கை தெருவில் உள்ள திருமண வீட்டாரிடம் , ஏன் இப்படி பந்தல் போட்டு தெருவை அடைத்து அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறீர்கள் என்று கேட்டேன் . அதற்கு அவர் வெட்டை இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க என்றார் . பள்ளிவாசல் இருக்கிறது , பெண்கள் தைக்காக்கள் இருக்கிறது அங்கு வைத்து உங்கள் காரியங்களை செய்யலாமே என்றேன் . திருமண வீடு என்பதால் மேலும் பிரச்சினைகள் வரகூடாது என்று நகன்றுவிட்டேன் .
யாரால் இந்த பிரச்சினை ?
--------------------------------------
திருமண வீட்டார்தான் இதற்கு முக்கிய காரணம் என்று யோசிக்கையில் இன்னொரு தகவலும் வந்தது . ஊரில் ஒரே ஒரு திருமணம்தான் நடக்கிறது , அதன்பிறகு சமீபத்தில் வேறு எங்கும் திருமணம் இல்லை என்றால் அந்த " ரோடு அடைப்பு , பந்தல் " ஒரு நாளைக்குள்ளாகவே அகற்றப்பட்டுவிடுமாம் .
ஆனால் அடுத்தடுத்து , இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒருவார இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் திருமணம் வந்தால் பந்தல் காரர் (வெளியூர் காரர்) முன்பிருந்த பந்தலை அவ்வளவு சீக்கிரம் கழற்ற மாட்டாராம் . ஏனெனில் கழற்றினால் பொருட்கள் அத்தனையும் தன் ஊருக்கு கொண்டு சென்று திரும்ப கொண்டுவர செலவு ஆகுமாம் . அதனால்தான் முதலில் போட்ட பந்தல் ரோடு அடைப்பு அப்படியே இருக்கும் .
இதற்கு தீர்வுதான் என்ன ?
---------------------------------------
நகராட்சி , திருமண நிகழ்சிகள் , பொது விழாக்கள் போன்றவற்றிற்கு தெருவில் பந்தல் போட மட்டுமே அனுமதி கொடுக்க வேண்டும் . ரோட்டை அடைத்து செய்யும் காரியங்களுக்கு கண்டிப்பாக , முகதாட்சண்யம் பாராமல் , ஏழை பணக்காரன் என்று பாராமல் அனுமதி கொடுக்கவே கூடாது .
சில வருடங்களுக்கு முன் ........ குத்துக்கள் தெரு , சதுக்கை தெரு , நெய்னார் தெரு ( பெரியபள்ளி அருகில் ) ஒரே நேரத்தில் ரோட்டை அடைத்து விருந்து. கோமான் தெருவுக்கு செல்லும் ஒருவர் , செல்ல முடியாமல் அவதிப்பட்டு , மணமக்களையும் அவர்கள் வீட்டாரையும் சபித்துக்கொண்டு சென்றார். இது தேவையா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross