Re:... posted bynizam (india)[26 August 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 29708
டேக் டைவர்சன் எடுத்து விவேக் திருப்பதி போன கதைதான்.
ரோடு அளவு சுருங்கியதுதான் முக்கிய காரணம் பைக் போகும் அளவுக்கு இடம் விட்டு பந்தல் கட்டவேண்டும் என்றால் அந்த பந்தலில் மாப்பிள்ளை மட்டும்தான் உட்காரமுடியும். இதற்கான தீர்வு பெருகி வரும் ரோட்டை ஆக்கிரமித்து வீடு போல படி சாக்கடை கட்டும் கலாச்சரத்தை ஒழித்து கட்டவேண்டும்.
எதிர்காலத்தில் மின்கம்பங்களை நீக்கி மின்கம்பிகளை பாதாளத்தில் பதிக்கும் திட்டம் நீரைவேற்ற பட வேண்டும். மற்ற சமூகத்தினரை போல ரிசப்சன் கல்யாணம் பெண் ஜோடிப்பு போன்றவற்றை கல்யான மண்டபங்கள் கட்ட பட்டு (ரியல் எஸ்டேட் அதிபர்கள் தங்கள் முதலீட்டை இதில் செய்யலாம்)அதில் நடத்தினால் இந்த பிரச்சினைகள் குறையும்.
மன்னிக்கவும் இதோடு திருமணம் சம்பதப்பட்ட ஆனால் இந்த செய்தியோடு சம்பந்தபடாத ஒரு விசயத்தை கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். நமதூரில் பாரம்பரியமாக இரண்டு பேர் இருந்து சாப்பிடும் வழக்கம் நல்ல முறை அதனால் சமத்துவம் தோழமை வளர்கிறது. அது தொடர வேண்டும் அதே சமயம் நமதூர் வாசிகள் பெரும்பாலும் வெளிநாடு வெளியூர் தொழில் வேலை என்று இருப்பதால் அவர்களுக்கு பழைய நண்பர்கள் பழக்கமானவர்கள் தொடர்பில் இருப்பது இல்லை. தாங்கள் பல காலம் கழித்து உள்ளூர் வரும் கல்யாண விருந்து அழைப்பு கூட ஒரு ஆள் (அதுவும் சொல்லி வந்த ஆளாக இருக்க வேண்டும்) கிடைக்காத சந்தர்பத்தில் அந்த விருந்தை அட்டண்ட் பண்ண முடியாத சூழ்நிலை ஏற்பாடுகிறது. அப்படி சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு தனியாக பரிமாறும் ஏற்பாடும் அதை பற்றிய குறிப்பை அழைப்பு அட்டையிலும் வெளியிடும் செய்ய வேண்டும். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால் அப்படி தனியாக வந்தவர்கள் வெளியூர் விருந்தினர் பகுதியில் (விதிவிலக்காக சிலர் இருக்கலாம்) அமரமுற்பட்டபோது அவமானபடுதியதை நான் கண்டு வேதனைப்பட்டேன்.
நபி (ஸல்) மொழிகிறார்கள் விருந்திலே மோசமான விருந்து பாரபட்சம் காட்டப்படும் விருந்து.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross